மீண்டும்  சாம்பியன்னு நிரூப்பிச்சுட்டாரு.. 2023 அவருக்கு நல்ல வருஷமா அமைஞ்சது.. வெங்கடேஷ் பிரசாத் பாராட்டு

Venkatesh Prasad 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடம் இந்திய அணிக்கு சற்று தடுமாற்றமாகவே இருந்தது. ஏனெனில் 2023 ஆசிய கோப்பை மட்டுமே வென்ற இந்தியா முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஃபைனல் மற்றும் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் இந்த வருடம் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு போராடியது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அதை விட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த வருடம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடி 2048 ரன்கள் குவித்து பழைய பன்னீர் செல்வமாக எதிரணிகளை சொல்லி அடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

கிங் கோலியின் கம்பேக்:
கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு அனைத்து எதிரணிகளுக்கும் சவாலை கொடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். இருப்பினும் யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவர் அதற்காக சந்தித்த விமர்சனங்களுக்காக அஞ்சாமல் 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார்.

அதை தொடர்ந்து 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக காலத்திற்கும் மறக்க முடியாத மகத்தான வெற்றியை பெற்றுக்கொடுத்த அவர் 2023 உலகக் கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் (765) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் 2023 விராட் கோலிக்கு மிகச் சிறந்த வருடமாக அமைந்ததாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “இந்த தலைமுறையின் மகத்தான பேட்ஸ்மேன் மற்றும் சாம்பியன் வீரர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்தார். இந்த வருடம் அவருக்கு அபாரமானதாக அமைந்தது”

இதையும் படிங்க: 2வது டெஸ்டில் இந்தியா இன்னும் மோசமா பந்து வீசி தோற்க வாய்ப்பிருக்கு.. ஆலன் டொனால்ட் கணிப்பு

“கடந்த சில வருடங்களாக தடுமாறி வந்த அவருக்கு இந்த வருடம் மிகவும் சிறந்ததாக அமைந்தது என்றே நான் சொல்வேன். வெற்றிக்கான அந்த பசியும் ஆர்வமும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் ஒரு உண்மையான சாம்பியனுக்கு அடையாளமாகவும் இருந்தது. அது தான் விராட்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement