2வது டெஸ்டில் இந்தியா இன்னும் மோசமா பந்து வீசி தோற்க வாய்ப்பிருக்கு.. ஆலன் டொனால்ட் கணிப்பு

Allan Donald
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா வரலாற்றில் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.

அத்துடன் இந்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது 6வது இடத்திற்கு சரிந்து வீழ்ச்சியை கண்டுள்ளது. எனவே இதிலிருந்து மீண்டு வந்து குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய ஜூன் 4ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கும் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்க உள்ளது.

- Advertisement -

இன்னும் தடுமாறலாம்:
இந்நிலையில் சென்சூரியனில் 408 ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்கள் கேப் டவுன் நகரில் நடைபெறும் 2வது போட்டியில் அதை விட அதிகமாக தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் ஆலன் டோனல்ட் தெரிவித்துள்ளார். மறுபுறம் அந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்க பவுலர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“கேப் டவுனுக்கு வந்தால் நீங்கள் அதிகமாக அதிகமாக உழைக்க வேண்டும். இங்கே வெற்றி பெற இரு அணிகளும் அதிக எனர்ஜியை வெளிப்படுத்த வேண்டும். கேப் டவுன் இரு அணியின் பவுலிங் அட்டாக்கிடம் இருந்து உண்மையான திறமையை வெளிக்கொண்டு வரும். நீங்கள் அங்கே ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். ஏனெனில் அங்குள்ள பிட்ச் சற்று அதிக ஃபிளாட்டாக இருக்கும் என்பதால் பார்ட்னர்ஷிப்கள் அமைக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது. எனவே அது டெஸ்ட் போட்டிக்கு மிகவும் கடினமாக இருக்கும்”

- Advertisement -

“ஆனால் அங்கே முதல் இன்னிங்ஸ் பவுலிங் உங்களுக்கு பரிசை கொடுக்கலாம். புதிய பந்தை ஃபுல்லாக பிட்ச் செய்து முதல் 25 – 30 ஓவர்களில் ஸ்விங் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதன் பின் வேகத்தை கலக்குங்கள். அந்த மைதானத்தில் பார்ட்னர்ஷிப் அமைக்கப்படும் போது உங்களின் 2 பவுலர்கள் ஷார்ட் மற்றும் ஃபுல்லாக வீச வேண்டும். அந்த வகையில் உங்களின் போது 2 வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது ஒருபுறம் ஸ்பின்னர் சவாலை கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: 2024இல் குணமடைஞ்சு அந்த இந்திய பிளேயர்.. மாஸ் காட்டுவாருன்னு நம்புறேன்.. நாசர் ஹுசைன் உறுதி

“அப்படியே போட்டி நகரும் போது ரிவர்ஸ் ஸ்விங் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலைகளை தென்னாப்பிரிக்கா நன்றாக அறிந்து செயல்படும் என்பதை நான் அறிவேன். அவர்கள் பிட்ச்சின் 5 – 5.50 மீட்டர் தூரத்தில் வீசுவார்கள். குறிப்பாக இந்தியாவை விட அவர்கள் சற்று பொறுமையாக இருந்து சிறப்பாக அந்த இடத்தில் வீசுவார்கள். அதிலும் 2வது இன்னிங்ஸில் அவர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்” என்று கூறினார்.

Advertisement