2024இல் குணமடைஞ்சு அந்த இந்திய பிளேயர்.. மாஸ் காட்டுவாருன்னு நம்புறேன்.. நாசர் ஹுசைன் உறுதி

Rishabh Pant Nasser Hussain
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் இந்திய அணி ஆசியக் கோப்பை தவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் தோல்விகளை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. எனவே அந்த தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுள்ள இந்திய அணி 2024 புத்தாண்டில் புது முயற்சிகளுடன் சிறப்பாக விளையாடி வெற்றி காண்பதற்காக தயாராகி வருகிறது.

இருப்பினும் 2023 காலண்டர் வருடத்தில் கேஎல் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்தது இந்திய அணியை பலப்படுத்தி வெற்றிக்காக போராட உதவியது. அதே போல 2024இல் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

- Advertisement -

கம்பேக் கொடுப்பார்:
ஏனெனில் 2017இல் அறிமுகமான அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்டு அதற்காக ஏராளமான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்டார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனை படைத்த அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

குறிப்பாக 2021 காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89* ரன்கள் அடித்து அவர் பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றியை மறக்க முடியாது. இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் சந்தித்த கார் விபத்தில் காயமடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி தற்போது குணமடைந்து வருகிறார். ஆனாலும் அவர் விளையாடாதது 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனல், தற்போதைய தென்னாப்பிரிக்க தொடர்களில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் 2024இல் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்து அசத்துவார் என்று நம்புவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் இல்லாமல் இந்தியா நன்றாகவே செயல்பட்டுள்ளது. குறிப்பாக கேஎல் ராகுல் அவருடைய இடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தினார். இந்த 2 வீரர்களையும் கொண்டிருப்பதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: அது தான் உங்க பிரச்சனை.. டெஸ்டில் முன்னேற சுப்மன் கில்லுக்கு லெஜெண்ட் கவாஸ்கர் ஆலோசனை

“காயத்திற்கு முன்பு ரிஷப் பண்ட் பாக்ஸ் ஆபிஸ் போல செயல்பட்டார். காயத்திற்கு பின்பும் அவர் பாக்ஸ் ஆபீஸ் செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மிகவும் மோசமான விபத்தில் சிக்கிய அவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து பயிற்சிகளை எடுத்து கிரிக்கெட்டை விளையாட துவங்கியுள்ள வீடியோக்களை பார்த்து வருகிறேன். ஆஷஸ் தொடரின் போது ரிக்கி பாண்டிங்கிடம் அவருடைய காயத்தின் நிலைமை பற்றி கேட்டறிந்தேன். ரிஷப் பண்ட் போஸ் ஆபீஸ் கிரிக்கெட்டர்” என்று கூறினார்.

Advertisement