குருவே நீங்க இப்டி சொல்லலாமா, ரசிகனை போல் பாராட்டிய சேவாக்கிற்கு – நன்றியுடன் தாகூர் கொடுத்த பதில் இதோ

Virender Sehwag Shardul Thakur
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் போராடி 204/7 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் 57 (44) ரன்கள் எடுத்தும் வெங்கடேஷ் ஐயர் 3, மந்திப் சிங் 0, கேப்டன் நிதிஷ் ராணா 1, ஆண்ட்ரே ரசல் 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 89/5 என திணறிய கொல்கத்தா 150 ரன்கள் தாண்டது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது களமிறங்கிய சர்தூள் தாக்கூர் யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக விளையாடி வெறும் 20 பந்துகளில் தன்னுடைய முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து 9 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (29) ரன்களை குவித்து காப்பாற்றி ஆட்டமிழந்தார். அவருடன் 6வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரிங்கு சிங் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (33) ரன்கள் குவித்து அசத்தினார். அதை தொடர்ந்து 205 ரன்களை துரத்திய பெங்களூவுருக்கு விராட் கோலி 21, டு பிளசிஸ் 23 என தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

குருவே சேவாக்:
ஆனால் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 5, மைக்கேல் பிரேஸ்வெல் 19, தினேஷ் கார்த்திக் 9 என முக்கிய வீரர்களை சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வெற்றியை வசப்படுத்திய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார். இந்த வெற்றிக்கு 68 ரன்களை 234.48 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் கொல்கத்தாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தி 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சர்தூள் தாகூர் அறிவிக்கப்பட்டார்.

பொதுவாகவே தன்னுடைய நாளில் சச்சின் டெண்டுல்கர், மைக்கேல் ஹசி போன்றவர்களை போல் அழகாக பேட்டிங் செய்யும் திறமையை கொண்ட அவர் முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை உடைத்து இந்தியாவுக்காக காபா, ஓவல் போன்ற மறக்க முடியாத வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் லார்ட் என கொண்டாடும் நிலையில் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் “லார்ட் ஷார்துல், லார்ட் ரிங்கு. அட்டகாசமான கிளீன் ஹிட்டிங்” என்று தனது ட்விட்டரில் தமக்கே உரித்தான பாணியில் பாராட்டினார்.

- Advertisement -

அந்த நிலையில் தம்முடைய குருவே நீங்கள் தான் உங்களைப் பார்த்து தான் இதையெல்லாம் கற்றுக் கொண்டேன் என்று சேவாக்கிற்கு நன்றி தெரிவித்த தாகூர் நீங்கள் போய் இப்படி பாராட்டலாமா என்ற வகையில் போட்டியின் முடிவில் மகிழ்ச்சியாக பதிலளித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாஜி. பந்தை எப்படி அதிரடியாக அடிப்பது என்பதை நாங்கள் அனைவரும் உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டோம். வேகபந்து வீச்சாளர்களுக்கு எதிராக உங்களைத் தவிர்த்து யார் அவ்வளவு தெளிவாக அடிக்க முடியும்? அதை நாங்கள் அனைவரும் நீங்கள் விளையாடியதை பார்த்து தான் கற்றுக் கொண்டோம்”

“பொதுவாக ஸ்கோர் போர்டை பார்த்தால் நாம் அழுத்தத்திற்கு உட்படுவோம் என்று சொல்வார்கள். ஆனால் அது போன்ற சமயங்களில் சிறந்து விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். அதன் காரணமாகவே ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்தும் என்னால் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட முடிந்தது”

இதையும் படிங்க: தேசிய கீதத்தில் அப்டி பண்ணாரு, அதான் வெறியில் ரோஹித் சர்மாவை தட்டி தூக்குனேன் – 2022 உ.கோ பின்னணியை பகிர்ந்த ஹாரீஸ் ரவூப்

“மேலும் அணி நிர்வாகம் மற்றும் பயிற்சிகள் தான் இந்த இன்னிங்ஸ் விளையாடுவதற்கு உதவியாக இருந்தது” என்று கூறினார். மேலும் அதிரடியாக விளையாடுவது பற்றி தமக்கு கற்றுக் கொடுக்குமாறு உடன் உரையாடிய ரஹ்மத்துல்லா குர்பாஸிடம் கேட்டுக்கொண்ட சார்துல் தாக்கூர் பிரபலமான ஆப்கானிஸ்தான் மொழி வார்த்தைகளையும் கற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

Advertisement