தேசிய கீதத்தில் அப்டி பண்ணாரு, அதான் வெறியில் ரோஹித் சர்மாவை தட்டி தூக்குனேன் – 2022 உ.கோ பின்னணியை பகிர்ந்த ஹாரீஸ் ரவூப்

Haris Rauf
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதிய போது பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியா ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் 4, ரோகித் சர்மா 4, சூரியகுமார் யாதவ் 15 என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 31/4 என ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது.

- Advertisement -

அப்போது பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து நங்கூரமாக நின்று இந்தியாவை மீட்டெடுத்த விராட் கோலி அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார். இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் பாண்டியா முக்கிய நேரத்தில் 40 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து காலத்தால் மறக்க முடியாத சரித்திர வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார்.

ரோஹித் மீது வெறித்தனம்:
மேலும் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் செய்த சொதப்பலை செய்யாத ரவிச்சந்திரன் அஷ்வின் தூக்கி அடித்து வரலாற்று வெற்றியை பினிஷிங் செய்தது தமிழக ரசிகர்களால் மறக்க முடியாது. அதை விட அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய ஹாரிஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பின்னங்காலில் நின்று அசால்டாக நேராக விராட் கோலி பறக்க விட்ட சிக்சர் இன்றும் பல ஜாம்பவான்களுக்கு எப்படி அடித்தார் என்று புரியாத புதிராக உள்ளது.

மொத்தத்தில் அன்றைய நாளில் வரலாற்றின் மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் விளையாடி நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்த விராட் கோலியை அடுத்த முறை சந்திக்கும் போது நிச்சயமாக அவுட்டாக்குவேன் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் ஹாரிஸ் ரவூப் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் அந்தப் போட்டி தூங்குவதற்கு முன்பாக தங்களுடைய நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாடி லாங்குவேஜ் அதிருப்தயடையும் வகையில் இருந்ததாக தெரிவிக்கும் ஹாரீஸ் ரவூப் அதனாலேயே அவரை அவுட்டாக்க வேண்டும் என்ற வெறியுடன் பந்து வீசியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அந்த வெறியுடன் ரோகித் சர்மாவை 4 (7) ரன்களிலும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் சூரியகுமார் யாதவை 15 (10) ரன்களில் அவுட்டாக்கியதாக தெரிவிக்கும் அவர் அந்த 2 விக்கெட்டுகள் தனது தரமான பந்து வீச்சுக்கு பரிசாக கிடைத்ததாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்தப் போட்டியில் எங்களுடைய தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது நான் ரோகித் சர்மாவை பார்த்தேன். அப்போது அவருடைய விக்கெட்டை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று நான் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஏனெனில் அந்த சமயத்தில் அவர் வெளிப்படுத்திய பாடி லாங்குவேஜ் சரியாக இல்லாமல் எங்களை பயமுறுத்தும் வகையில் இருந்தது”

rauf

“அதனால் அவருடைய விக்கெட்டை எடுத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று எனக்கு நானே அந்த தருணத்தில் சொல்லிக் கொண்டேன். இறுதியில் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் விக்கெட்டுகளை எடுத்தது பரிசு போல அமைந்தது” என்று கூறினார். இவரது இந்த கருத்து ரோகித் சர்மா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உங்களது தேசிய கீதம் வாசிக்கும் போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடாமல் ரோகித் சர்மாவை ஏன் பார்த்தீர்கள் என்று இந்திய ரசிகர்கள் பதிலளிக்கிறார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : அவரை இப்டி அவமானப்படுத்தாதீங்க, ராகுல் – ரோஹித் மாதிரி சமமான சான்ஸ் கொடுங்க, இந்திய வீரருக்கு ஹர்பஜன் ஆதரவு

மொத்தத்தில் எது எப்படியாக இருந்தாலும் அடுத்ததாக பாகிஸ்தானுடன் மோதும் போது இந்த கருத்துக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பதிலடி கொடுப்பார்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்றும் இந்திய ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்களில் பதிலளித்து வருகிறார்கள்.

Advertisement