IPL 2023 : அவரை இப்டி அவமானப்படுத்தாதீங்க, ராகுல் – ரோஹித் மாதிரி சமமான சான்ஸ் கொடுங்க, இந்திய வீரருக்கு ஹர்பஜன் ஆதரவு

Harbhajan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நட்சத்திர இந்திய வீரர் ஷிகர் தவான் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் 6 வருடங்கள் கழித்து முதல் முறையாக தன்னுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று முதல் கோப்பையை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்த அணிக்காக இதுவரை 2 போட்டிகளில் 126 ரன்களை 63.00 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ள ஷிகர் தவான் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதலே டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக விளையாடி 6000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வரும் அவர் விராட் கோலிக்கு பின் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரராக ஜொலித்து வருகிறார்.

Shikar Dhawan

அதே போல சர்வதேச கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் தடுமாறிய அவர் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்க கொடுத்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்து அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்போதிலிருந்து ரோகித் சர்மாவுடம் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த அவர் 2015 உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது, 2018 ஆசிய கோப்பையின் தொடர் நாயகன் என பெரிய தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தவானை அவமானப்படுத்தாதீங்க:
அந்த வகையில் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய அவரது இடத்தை கேஎல் தனதாக்கினார். மறுபுறம் 2020, 2021, 2022 ஐபிஎல் சீசன்களில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தும் அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்க தவறியதாலும் 37 வயதை தாண்டி விட்டதாலும் சமீப காலங்களில் ஜிம்பாப்பே போன்ற 2வது தர இந்திய அணியில் மட்டும் வாய்ப்பு கொடுத்து வந்த பிசிசிஐ தற்போது சுப்மன் கில், இஷான் கிசான் போன்ற இளம் வீரர்கள் வந்து விட்டதால் அவரை மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

Shikhar Dhawan

இந்நிலையில் கிட்டத்தட்ட அவருடைய வயதிலேயே இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் இந்திய அணி நிர்வாகம் ஷிகர் தவானை மட்டும் கழற்றி விட்டு அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரோஹித் போன்றவர்களை விட கடந்த 3 சீசன்களில் தலா 500+ ரன்களை குவித்து வரும் தவானுக்கு அவர்களைப் போலவே சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்திய நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஷிகர் தவான் சமீப காலங்களில் நிறைய சுற்றுப்பயணங்களில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தினார். ஆனால் திடீரென்று நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என்பது போல் அவர் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ளார். இதை பார்ப்பது எனக்கு சோகமாக இருக்கிறது. ஏனெனில் இந்திய அணியில் அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். மிகப்பெரிய வீரரான அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்றியுள்ளார். அவரை நீங்கள் இவ்வாறு நடத்தக்கூடாது”

Harbhajan

“ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அவர் 56 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனால் அவரை விட சுமாராக செயல்படும் சிலரின் பெயர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. இருப்பினும் எடுத்துக்காட்டாக ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் ஆகியோர் மிகப்பெரிய வீரர்களாக இருப்பதால் நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறீர்கள்”

இதையும் படிங்க:வீடியோ : டிஸிப்ளின்க்கு பெயர் போன ஜோ ரூட்டை குத்தாட்டம் போட வைத்த சஹால் – இங்கிலாந்து ரசிகர்கள் வியப்பு

“மறுபுறம் ஷிகர் தவானுக்கு அணியில் வாய்ப்பில்லை. ஆனால் அவர் எப்போதும் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆனாலும் அவருக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை? ஃபிட்னஸ் பற்றி பேசும் போது கூட அவர் விராட் கோலிக்கு நிகராக உள்ளார்” என்று கூறினார்.

Advertisement