வீடியோ : டிஸிப்ளின்க்கு பெயர் போன ஜோ ரூட்டை குத்தாட்டம் போட வைத்த சஹால் – இங்கிலாந்து ரசிகர்கள் வியப்பு

Joe Root Dance
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்விக்கும் வகையில் கோலகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கோப்பையை வெல்ல களமிறங்கியுள்ள 10 அணிகளில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கடந்த சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி 2008க்குப்பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஃபைனலுக்கு சென்று குஜராத்திடம் தோல்வியை சந்தித்தது.

எனவே இம்முறை மீண்டும் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள அந்த அணிக்கு கடந்த முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற ஜோஸ் பட்லர் இம்முறையும் அதிரடியாக ரன்களை குவிக்க துவங்கியுள்ளார். மேலும் பந்து வீச்சு துறையில் கடந்த வருடம் ஊதா தொப்பி வென்ற சஹால் இதுவரை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள மீண்டும் அந்த தொப்பியை வெல்வதற்கான பட்டியலில் 2வது இடத்தில் போட்டி போட்டு வருகிறார். முன்னதாக இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

சஹால் ரூட் குத்தாட்டம்:
ஏனெனில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு நிகராக மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் நவீன கிரிக்கெட்டில் மகத்தான 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சொல்லப்போனால் அந்த மூவரை விட சிறப்பாக செயல்பட்டு வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்து சிறப்பான சாதனை படைத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சற்று மெதுவாக விளையாடுவதால் அவர் ஐபிஎல் தொடருக்கு செட்டாக மாட்டார் என்று எண்ணத்துடன் இதுவரை எந்த அணியும் வாங்காமல் இருந்து வந்தது.

ஆனால் தற்போது முதல் முறையாக ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்டுள்ள அவர் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் களமிறங்கி விளையாடவில்லை என்றாலும் இந்த சீசனில் ஏதோ ஒரு தருணத்தில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களை வரவேற்பதற்காக அந்த அணி நிர்வாகம் நேற்று பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

- Advertisement -

அதில் ஜோ ரூட்டை மேடைக்கு அழைத்த இந்திய வீரர் யுஸ்வென்ற சஹால் பிரபல பஞ்சாப் பாடலுக்கு நடனமாடுமாறு கேட்டுக் கொண்டார். பொதுவாகவே சமூக வலைதளங்களிலும் களத்திலலும் சக வீரர்கள் மட்டுமல்லாமல் எதிரணி வீரர்கள் மற்றும் அம்பயர்களிடம் ஜாலியாக பழகக் கூடிய சஹால் தம்முடன் நடனம் செய்யுமாறு ஜோ ரூட்டை கேட்டுக் கொண்டு மியூசிக் போட சொன்னார். அதற்கு தயாரான ஜோ ரூட் ஒரு சில நொடிகளில் சாஹலை மிஞ்சும் அளவுக்கு பின்புறமாக திரும்பி வித்தியாசமான ஸ்டைலில் நடனமாடியது அரங்கில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏனெனில் பொதுவாகவே களத்தில் கட்டுக்கோப்புடன் செயல்படக்கூடிய ஜோ ரூட் களத்திற்கு வெளியேயும் எந்த சேட்டைகளையும் செய்யாமல் எப்போதுமே கச்சிதமாக செயல்படக் கூடியவராக அறியப்படுபவர். அப்படிப்பட்ட அவர் முதல் முறையாக இவ்வளவு ஓப்பனாக நடனமாடுவதை இதற்கு முன் நாங்களே பார்த்ததில்லை என்று இங்கிலாந்து ரசிகர்களும் இந்த வீடியோவை பார்த்து வியப்பை வெளிப்படுத்துகிறார்கள். அதே நிகழ்ச்சியில் ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரும் பாடல்கள் பாடி அடுத்த போட்டிக்கு முன்பாக புத்துணர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க:வீடியோ : உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே அசத்திய 19 வயது இளம் வீரர் – ஐபிஎல் வரலாற்றில் அரிதான சாதனை

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் தன்னுடைய 3வது போட்டியில் டெல்லி அணியை ராஜஸ்தான் எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் இல்லாத நிலைமையில் டேவிட் வார்னர் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த டெல்லி அந்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. மறுபுறம் தடுமாற்றமாக செயல்படும் டெல்லியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ராஜஸ்தான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement