சி.எஸ்.கே அணியில் அவரை நெனச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு – வருத்தப்பட்டு பேசிய ஷேன் வாட்சன்

Watson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு ஒரு மறக்கக்கூடிய தொடராகவே மாறியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை அணி இத் தொடரின் ஆரம்பத்திலேயே ஜடேஜாவை கேப்டனாக மாற்றியது. புதிய கேப்டனுடன் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு இந்த ஆண்டும் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

CSK vs SRH

- Advertisement -

ஆனால் ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது 6 தோல்விகளை சந்தித்ததால் கேப்டன்சி அழுத்தம் தாங்காமல் ஜடேஜா அந்த பதவியில் இருந்து வெளியேறினார். பின்னர் தோனியின் தலைமையில் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

எனவே தற்போது வரை 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் சென்னை அணியானது புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.

Jadeja

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் சிஎஸ்கே வின் நிலைகுறித்து வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமின்றி ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டம் குறித்தும் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சென்னை அணியில் ஜடேஜாவின் இடத்தை நினைத்தால் தான் எனக்கு வருத்தமாக உள்ளது. ஏனெனில் அவர் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டவுடனே நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் சென்னை அணி முழுவதுமாக தோனியை சார்ந்தே கட்டமைக்கப்பட்டது. சென்னை அணியில் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் தங்களது வாய்ப்பை இழக்கப்போகும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

எனவே ஜடேஜா கேப்டனான போது அவர் நிச்சயம் அழுத்தத்தை சந்திப்பார் என்று நினைத்தேன். அதைப் போன்றே அவர் அழுத்தத்தை சந்தித்து மீண்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜடேஜா ஒரு திறமையான வீரர் அவரின் இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து பழையபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என வாட்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement