அடுத்ததா சிட்னியில் எப்போ கிளையை திறப்பிங்க? சுரேஷ் ரெய்னாவிடம் ஸ்பெஷல் கோரிக்கை – வைத்த ஷேன் வாட்சன்

Suresh Raina Shane Watson
- Advertisement -

நட்சத்திர இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2008 முதல் முன்னாள் கேப்டன் தோனி ஆதரவுடன் நிலையான இடத்தைப் பிடித்து மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 2011 உலக கோப்பையில் கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது போல் நாக் அவுட் போட்டிகளில் முக்கிய ரன்களை எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்தார்.

மேலும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற அணியிலும் முக்கிய பங்காற்றியிருந்த அவர் 2015 உலகக் கோப்பை வரை முதன்மை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார். அதைத்தொடர்ந்து தோனிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் பெரிய ஆதரவு கிடைக்காத நிலைமையில் ஐபிஎல் தொடரிலும் 2008 முதல் தொடர்ந்து அட்டகாசமாக செயல்பட்டு வந்த அவர் ஒரு கட்டத்தில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து சென்னை 4 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் மிஸ்டர் ஐபிஎல் மற்றும் சின்ன தல என்று ரசிகர்கள் கொண்டாடிய அவர் 2019க்குப்பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

- Advertisement -

சிட்னியில் கிளை:
மேலும் தோனி ஓய்வு பெற்ற நாளில் நட்புக்கு இலக்கணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்ற அவர் கடந்த சில வருடங்களாக லெஜன்ட்ஸ் லீக் தொடர்களில் விளையாடி தற்போது வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உணவு பிரியரான சுரேஷ் ரெய்னா நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் தம்முடைய பெயரில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார். சாதாரண நாட்களிலேயே நமக்கு பிடித்த உணவுகளை நேரடியாக சமைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை ரெய்னா வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் சமையல் கலை மீது ஒரு ஆர்வம் கொண்டிருந்த அவர் தற்போது அதை பெரிதுபடுத்தும் வகையில் நெதர்லாந்தில் இந்த புதிய உணவகத்தை திறந்துள்ளார். குறிப்பாக அயர்லாந்தில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை கவரும் வகையில் வட இந்திய மற்றும் தென்னிந்திய பாரம்பரிய உணவுகள் தம்முடைய உணவகத்தில் கிடைக்கும் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். சிக்கன் சாத், மிக்ஸ் பகோரா, பன்னீர் சிக்கன், தந்தூரி சிக்கன் ஆனியன் பஜ்ஜி, கபாப் போன்ற உணவுகளுடன் தஹி பல்லா, பானி பூரி, ஆலு சாத், சமோசா போன்ற உணவு வகைகள் அவருடைய உணவகத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் மீன் உணவுகளும் குலாப் ஜாமுன் போன்ற இனிப்பு உணவுகளும் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளும் ரெய்னாவின் உணவகத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது. அந்த உணவகத்தில் மிகவும் குறைந்த விலைக்கு ரைத்தா 1.49 யூரோஸ் அதாவது 132 ரூபாய்க்கும் அதிகபட்சமாக தந்தூரி லாப்ஸ்டர் 24.5 யூரோ அதாவது 2183 ரூபாய்க்கும் கிடைக்கும் என்று உணவு பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை திறந்து வைத்த ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“முன் எப்போதும் இல்லாத சமையல் ருசிக்கு தயாராகுங்கள். ஆம்ஸ்டார்டமில் உள்ள ரெய்னா இந்திய உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பல ஆண்டுகளாக உணவின் மீதான எனது அன்பையும் சில சமையல் சாகசங்களையும் நேரில் பார்த்திருப்பீர்கள். இப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐரோப்பாவின் இதயத்திற்கு நேராக மிகவும் உண்மையான மற்றும் சுவைகளை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நாங்கள் ஒன்றாக ஒரு சுவையான சாகசத்தை மேற்கொள்ளும் பயணத்தில் நீங்களும் என்னுடன் சேருங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு. கொல்கத்தா வீரருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

அவருடைய இந்த உணவகம் சிறப்பாக செயல்பட இர்ஃபான் பதான் ஒரு நிறைய முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னைக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் “வாவ். வாழ்த்துக்கள். ஆம்ஸ்டர்டாம் மிகவும் அதிர்ஷ்டமான இடம். சீக்கிரம் சிட்னியில் ரெய்னா இந்திய உணவகத்தை துவங்குங்கள்” என்ற கோரிக்கையுடன் பதிலளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement