டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு. கொல்கத்தா வீரருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

IND
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

- Advertisement -

இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே பிசிசியின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியே விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rinku Singh 1

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பினிஷராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம்வீரரான ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரின் போது நம்ப முடியாத வெற்றிகளை தனது அசாத்தியமான அதிரடி ஆட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடினால் நிச்சயம் மிடில் ஆர்டர் பலப்படும் என்பதனால் அவருக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும் விதமாக இந்திய அணி நிர்வாகம் அவரை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : பலமான அணிகளிடம் பூனை, கத்துக்குட்டிகளிடம் புலியாக பாய்ந்து – 33 வருட உலக சாதனை படைத்த ஹசரங்கா

மேலும் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐபிஎல் தொடரில் அசத்திய பல இளம் வீரர்களுக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement