பலமான அணிகளிடம் பூனை, கத்துக்குட்டிகளிடம் புலியாக பாய்ந்து – 33 வருட உலக சாதனை படைத்த ஹசரங்கா

Wanindu Hasaranga
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த மாபெரும் தொடரில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா 2011க்குப்பின் உலக கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. எனவே கடைசி 2 அணிகளை தீர்மானிப்பதற்கான தகுதி சுற்று தற்போது ஜிம்பாப்வே நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து ஆகிய அணிகள் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முடிவில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதே போல 1996 உலக கோப்பையை வென்ற இலங்கை நேரடியாக தகுதி பெறாமல் இந்த சுற்றில் விளையாடி வருகிறது. குறிப்பாக குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அந்த அணி முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற நிலையில் ஜூன் 25ஆம் தேதியான நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் அயர்லாந்தை 133 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

- Advertisement -

கத்துக்குட்டிகளிடம் புலி:
ஹராரேயில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சிறப்பாக செயல்பட்டு 49.5 ஓவரில் 325 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக திமுத் கருணரத்னே சதமடித்து 103 (103) ரன்களும் சமரவிக்ரமா 82 ரன்களும் டீசல் வா 42* ரன்களும் எடுக்க அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் 4 விக்கெட்டுகளும் மெக்கேர்த்தி 3 கிரிக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 326 என்ற மிகவும் கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்து ஆரம்பம் முதலே திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இலங்கையின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 31 ஓவரில் வெறும் 192 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக குர்ட்டீஸ் கேம்பர் 39 ரன்களும் ஹேரி டெக்டர் 33 ரன்களும் எடுக்க இலங்கை சார்பில் சொல்லில் மாயாஜாலம் நிகழ்த்திய வணிந்து ஹஸரங்கா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியால் குரூப் பி பிரிவில் பங்கேற்ற 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்ற இலங்கை சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் இலங்கை நம்பிக்கை நட்சத்திரம் வனிந்து ஹசரங்கா 10 ஓவரில் 79 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதை விட இதே தொடரில் இதற்கு முன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகளும் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகளும் எடுத்த அவர் இந்த போட்டியிலும் தொடர்ந்து 3வது முறையாக 5 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் 5 விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் உலக சாதனையை ஹஸரங்கா சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக பெஷாவர் மற்றும் சியாகோட் மைதானங்களில் நடைபெற்ற அடுத்தடுத்த போட்டிகளில் முறையே 5/11, 5/16 விக்கெட்களை எடுத்தது யூனிஸ் அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற போட்டியிலும் 5/52 விக்கெட்களை எடுத்து அந்த உலக சாதனையை முதல் வீரராக படைத்தார்.

- Advertisement -

அப்படி வலுவான அணிகளுக்கு எதிராக 2 வெவ்வேறு தொடர்களில் அவர் படைத்த சாதனையை கற்றுக் குட்டிகளுக்கு எதிராக படைத்துள்ள ஹஸரங்கா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே தொடரில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் 5 விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இங்கு முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த 2023 காலண்டர் வருடத்தில் ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளிலும் பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் அவர் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை.

இதையும் படிங்க:தோனியை விட அவர் தான் எப்போதும் இந்தியாவின் ஒரிஜினல் மிஸ்டர் கூல் கேப்டன் – ஜாம்பவானை பாராட்டிய கவாஸ்கர்

ஆனால் சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளில் 6 விக்கெட்களை எடுத்த அவர் இந்த குவாலிபயர் தொடரில் 3 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை அள்ளி வலுவான அணிகளுக்கு எதிராக பூனையாகவும் கத்துக்குட்டிகளுக்கு எதிராக புலியாகவும் பாய்ந்து வருகிறார்.

Advertisement