அவரு அடிக்குற அடியை பாத்தா உலககோப்பை தொடர்நாயகன் விருது அவருக்குதான் – ஷேன் வாட்சன் கருத்து

Watson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது வரை 26 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் 3 நாக் அவுட் போட்டிகளும் இருக்கின்றன.

இந்த தொடரில் இதுவரை இந்தியா, தென்னாபிரிக்கா. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் இருக்கும் வேளையில் இந்த தொடரினை கைப்பற்றப்போகும் அணி எது? எந்த வீரர் தொடர் நாயகன் விருது வெல்வார்? என்பது குறித்த பேச்சுக்கள் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றன.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக நிச்சயம் ஏதாவது ஒரு அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் தான் இந்த உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதினை வெல்வார்கள் என்று பலராலும் பேசப்பட்ட வேளையில் எந்த ஒரு அணியை சேர்ந்த ஆல்ரவுண்டரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

அதேவேளையில் ஒரு சில வீரர்கள் நம்ப முடியாத அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் இந்த உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தான் இந்த உலகக் கோப்பை தொடரின் தொடர்நாயகன் விருதினை வெல்வார். இந்த தொடரில் இதுவரை அவர் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. உலகில் உள்ள மிகச் சிறந்த பவுலர்களையும் முதல் பந்தில் இருந்தே அவர் அடித்து ஆடுகிறார். அதோடு அவரது பார்ம் இறுதிவரை இதேபோன்று தொடரும் பட்சத்தில் இந்திய அணியே இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அவரே தொடர் நாயகன் விருதினையும் வெல்வார் என்று வாட்சன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நீங்க கிரேட் பிளேயர்லாம் கிடையாது.. அந்த விஷயத்தில் ரோஹித்தை பாருங்க.. பாபர் அசாமுக்கு ஹபீஸ் அட்வைஸ்

இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் அதிகபட்சமாக விராட் கோலி 5 போட்டிகளில் 354 ரன்கள் குவித்திருந்தும், பவுலிங்கில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்திருந்தும் அவர்களை குறிப்பிடாமல் ரோகித் சர்மாவை வாட்சன் குறிப்பிட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement