நீங்க கிரேட் பிளேயர்லாம் கிடையாது.. அந்த விஷயத்தில் ரோஹித்தை பாருங்க.. பாபர் அசாமுக்கு ஹபீஸ் அட்வைஸ்

Mohammed Hafeez
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் 6 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கு தயாராகியுள்ளது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது.

அதிலிருந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தெனாப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியிலும் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்த பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

ரோஹித்தை பாருங்க:
இந்த தோல்விகளுக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பேட்டிங் துறையில் கேப்டனாக முன்னின்று அசத்த வேண்டிய பாபர் அசாம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு கேப்டன்ஷிப் செய்வதிலும் முக்கிய நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து தோல்விகளுக்கு காரணமாக அமைந்து வருகிறார்.

இந்நிலையில் 4 வருடங்களாகியும் கேப்டன்ஷிப் செய்வதில் எவ்விதமான முதிர்ச்சியும் காணாத நீங்கள் இந்தியாவின் ரோகித் சர்மாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என பாபர் அசாமுக்கு முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பாபர் அசாம் தற்போதைக்கு நல்ல வீரராக இருக்கிறாரே தவிர மகத்தான வீரராக உருவெடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் என்று வரும் போது பாபர் அசாமிடம் இன்னும் முதிர்ச்சியை பார்க்க முடியவில்லை”

- Advertisement -

“குறிப்பாக 3 – 4 வருடங்களாக கேப்டனாக செயல்பட்டும் அவரிடம் நுணுக்கங்கள் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதனால் பாகிஸ்தானின் மகத்தான வீரர் என்று நீங்கள் அவரை அழைப்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஆம் அவர் நல்ல வீரர். ஆனால் இன்னும் மகத்தான வீரராக வரவில்லை. ஏனெனில் இன்னும் நிறையவற்றை அவர் தம்முடைய கேரியரில் நிரூபிக்க வேண்டியுள்ளது”

இதையும் படிங்க: எப்டி ஜெயிப்பாங்க.. முதல்ல 5 மாசம் சம்பள பாக்கியை கொடுங்க.. வாரியத்தை விளாசிய முன்னாள் பாக் வீரர்

“அதற்கு முன்பாகவே நாம் மகத்தானவர் என்ற பட்டத்தை கொடுக்கிறோம். அந்த பாராட்டும் எதிர்பார்ப்பும் பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட விடாமல் அவருக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. இந்த சூழ்நிலையில் அழுத்தம் தமக்கு பாதிப்பை கொடுப்பதாக நினைத்தால் அவர் இதற்கு தேவையான முடிவை எடுக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் கேப்டனாக இருப்பதால் நாம் அனைவரும் ஆதரவு கொடுத்தாலும் அவர் தன்னுடைய ஆக்ரோஷத்தில் முன்னேற வேண்டும். மறுபுறம் இந்தியாவை ரோகித் சர்மா ஆக்ரோசத்துடன் முன்னின்று வழி நடத்துவதாலேயே வெற்றிகரமாக செயல்படுகிறார்” என்று கூறினார்.

Advertisement