எப்டி ஜெயிப்பாங்க.. முதல்ல 5 மாசம் சம்பள பாக்கியை கொடுங்க.. வாரியத்தை விளாசிய முன்னாள் பாக் வீரர்

Zaka Ashraf
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய மண்ணில் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக விளையாடும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு முதல் அணியாக வெளியேறும் தருவாயில் இருக்கிறது. இத்தனைக்கும் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்த அந்த அணி நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் இந்தியாவிடம் 191 ரன்களுக்கு சுருண்டு உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக படுதோல்வியை சந்தித்தது.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 10 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை தவறவிட்டதால் 163 ரன்கள் அடித்த டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு 2வது தோல்வியை பரிசளித்தார். அதனால் பின்னடைவை சந்தித்த அந்த அணி கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சம்பளத்தை கொடுங்க:
அதனால் செமி ஃபைனல் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிர்கொண்ட பாகிஸ்தான் மீண்டும் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் 4 தொடர்ச்சியான தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 5 மாதமாக சம்பளம் கொடுக்காமல் இருந்தால் எப்படி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக உத்வேகத்துடன் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று பாகிஸ்தான் வாரியம் தலைவர் ஜாகா அஸ்ரப்பை முன்னாள் வீரர் ரசித் லதீப் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்ருமாறு. “பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் நிறைய செய்திகள் தவறாக இருக்கிறது”

- Advertisement -

“எனவே நான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு உண்மையான செய்தியை சொல்கிறேன். கடந்த 2 நாட்களாக பாபர் அசாம் வாரிய சேர்மேனுக்கு மெசேஜ் செய்தார். ஆனால் எந்த பதிலுமில்லை. அதே போல வாரியத்தின் தலைமை இயக்குனர் சல்மான் நசீர் மற்றும் சர்வதேச போட்டிகளின் இயக்குனர் உஸ்மான் வால்ஹா ஆகியோருக்கு அவர் மெசேஜ் செய்தும் எந்த பதிலும் வரவில்லை. ஆனால் கேப்டனுக்கு பதில் கொடுக்காத நீங்கள் அறிக்கை விடுகிறீர்கள்”

இதையும் படிங்க: 118/0 ரன்கள்.. ஹெட் – வார்னர் சரவெடியால் பவர் பிளேவில் ஆஸி மாபெரும் சாதனை.. நியூசிலாந்து மினி கம்பேக்

“குறிப்பாக வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை மறுசீரமைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அதனால் கடந்த 5 மாதங்களாக வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. பின்னர் எப்படி அவர்களால் விளையாட முடியும்? இதை நான் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார். முன்னதாக 5 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன் போர்கொடி உயர்த்திய பாகிஸ்தான் வீரர்கள் நாட்டுக்காக இலவசமாக விளையாடுகிறோம் ஆனால் ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களின் லோகோவை ஜெர்ஸியில் அணிய மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement