என்ன நடந்தாலும் இவரை மட்டும் டீம்ல இருந்து தூக்கிடாதீங்க. அவர் சூப்பர் பிளேயர் – ஷேன் வார்ன் வலியுறுத்தல்

Pandya
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை தொடரானது தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 23-ஆம் தேதி இன்று முதல் சூப்பர் 12 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த குழுவில் (6,6) அணிகள் பிரிந்து மோதுகின்றன. இந்த சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

ausvsrsa

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் இடம் பெறுவாரா ? என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே அவர் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக டேவிட் வார்னர் குறித்து சில விவாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் அவற்றிற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் டேவிட் வார்னர் குறித்து சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : டேவிட் வார்னர் மிகத் திறமையான வீரர். அவர் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் ஒரு நல்ல பிளேயர். இது போன்ற வீரர்கள் சறுக்கலை சந்தித்தாலும் முக்கியமான நேரங்களில் திறமையாக விளையாடக் கூடியவர். டேவிட் வார்னரின் திறமை என்பது நிரந்தரமான ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க : அடிச்சி சொல்றேன். இந்த 2 டீம்ல ஒரு டீம் தான் உலககோப்பையை ஜெயிக்கும் – ஷேன் வார்ன் கணிப்பு

அவர் நிச்சயம் தனது சறுக்கலை சரிசெய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஒரு ஆட்டத்தில் அவர் நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டால் இந்த டி20 உலக கோப்பையில் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார் என வார்னருக்கு ஆதரவாக ஷேன் வார்ன் தனது கருத்தினை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement