- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கும் இந்திய அணியின் கேப்டனாகும் ஆசை இருக்கு. பும்ராவிற்கு அடுத்து விருப்பத்தை தெரிவித்த – பவுலர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் இந்திய கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த அவரின் இந்த முடிவு இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகள், தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்த விராட் கோலியின் இந்த முடிவு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

அடுத்த கேப்டன் யார் :
இந்த வேளையில் விராட் கோலி அளவுக்கு இல்லை என்றாலும் அவரின் இடத்தை நிரப்ப கூடிய இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. அதில் தற்போதைய நிலவரத்தை கையாளும் வகையில் ஏற்கனவே வெள்ளை பந்து கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மாவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களாக இருக்கும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரையாவது கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இதில் குறிப்பாக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்க வேண்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனக்கும் ஆசை:
இந்நிலையில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட தமக்கும் ஆசை உள்ளதாக இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். இதுபற்றிய ஒரு செய்தியாளரின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசுகையில்,

- Advertisement -

“இப்போதைக்கு கேப்டன்ஷிப் பற்றிய எந்த எண்ணமும் எனக்கும் இல்லை. இருப்பினும் எந்த வகையான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டாலும் அதை மேற்கொள்ள நான் தயார். உண்மையை கூற வேண்டுமானால் இந்தியாவின் கேப்டன் பதவி வேண்டாம் என யாரும் சொல்லமாட்டார்கள். இருப்பினும் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்காற்ற வழி அதுமட்டுமல்ல. எனக்கு கிடைக்கும் வழிகளில் இந்திய கிரிக்கெட்டுக்கு நான் பங்காற்றுவேன்” என கூறியுள்ள முகமது ஷமி இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் பதவி தமக்கு கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் சிறப்பாக செய்வேன் என தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் பதவி கிடைப்பது என்பது அரிதினும் அரிதாகும். சொல்லப்போனால் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரும் இந்தியாவின் கேப்டனாக இருந்ததாக தெரியவில்லை. தற்போது கூட டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ஜஸ்பிரித் பும்ராவின் பெயரும் பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும் அவருக்கு கேப்டன் பதவி வழங்க வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது.

- Advertisement -

3 வகையிலும் தயார் :
வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதில் முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. அதுபற்றி அவர் கூறுகையில், “3 வகையான இந்திய அணிக்கும் விளையாட தயார். இந்திய வெள்ளை பந்து அணியிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாட காத்திருக்கிறேன்”என கூறினார்.

இதையும் படிங்க : அதெப்படி நீங்கள் அப்படி சொல்லலாம். ரவி சாஸ்திரியை விளாசும் ஹர்பஜன் – எதற்கு தெரியுமா?

இந்திய டெஸ்ட் அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலராக (14 விக்கெட்கள்) முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by