அதெப்படி நீங்கள் அப்படி சொல்லலாம். ரவி சாஸ்திரியை விளாசும் ஹர்பஜன் – எதற்கு தெரியுமா?

Harbhajan-1
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியில் இருந்து விலகி தற்போது சாதாரண வீரராக விளையாடி வருகிறார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை தொடர்ந்து 5 வருடங்கள் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று காட்டிய அவர் 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக எளிதில் உடைக்க முடியாத சாதனையுடன் விடை பெற்றுள்ளார்.

kohli

- Advertisement -

ரவி சாஸ்திரியின் சர்ச்சை பேச்சு:
முதலில் டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகிய விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்தது. அதில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் டெஸ்ட் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்ததாக கருதப்படுகிறது.

அந்த வேளையில் விராட் கோலி இன்னும் 2 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டிருந்தால் மேலும் 15 – 20 வெற்றிகளை பெற்று உலக அளவில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டனாக உலக சாதனை படைத்திருப்பார் என சமீபத்தில் ஓய்வு பெற்ற பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் வெற்றியை இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் பலர் ஜீரணிக்க முடியாத காரணத்தால் அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

Ganguly-dhoni

ஹர்பஜன் பதிலடி :
அது மட்டுமல்லாமல் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்றவர்கள் இந்தியாவுக்கு எத்தனை உலக கோப்பைகளை வாங்கி கொடுத்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் இந்த சர்ச்சையான கருத்துக்களுக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர்,

- Advertisement -

“அவர் யாரை பற்றி பேசுகிறார் என புரியவில்லை. யாருக்கு விராட் கோலியின் வெற்றிகள் ஜீரணமாகவில்லை என புரியவில்லை. நாம் இந்தியனாக விராட் கோலியின் சாதனைகளுக்கு பெருமை அடைகிறோம். சொல்லப்போனால் அவர் இன்னும் 40 அதிக வெற்றிகளுடன் மற்ற எந்த ஒரு இந்திய கேப்டனாலும் இருமடங்கு வெற்றிகள் பெற்றால் மட்டுமே எட்டக்கூடிய சாதனையை படைக்க விரும்புகிறோம்” என கூறிய அவர் விராட் கோலியின் வெற்றியால் இந்திய கிரிக்கெட்டில் யாரும் பொறாமை படவில்லை என பதிலடி கொடுத்தார்.

IND

குறை கூறும் ஹர்பஜன்:
அடுத்த 2 வருடங்களில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளதால் நிச்சயம் விராட் கோலி உலகசாதனை படைத்திருப்பார் என ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார். அதற்கு ஹர்பஜன்சிங் பதிலளிக்கையில், “இந்தியாவில் விளையாடக்கூடிய போட்டிகள் இந்தியாவுக்குத்தான் சாதகமாக வரும் என எப்படி உங்களால் கண்டிப்பாக கூற முடியும். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்த பின் சொந்த மண்ணில் முதல் ஓவரிலேயே சுழல் பந்துவீச்சு எடுபடக்கூடிய மைதானங்களில் இனி இந்தியா விளையாடும் என எனக்கு தோன்றவில்லை.

- Advertisement -

இனிமேல் பேட்ஸ்மேன்களும் தங்களது திறமையை நிரூபிக்கும் வண்ணம் பிட்ச்கள் இருக்கும் என நம்புகிறேன். அத்துடன் கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட்டின் புள்ளிவிவரங்களை புரட்டிப் பார்த்தால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதையே மறந்துவிட்டார்கள். கடந்த 2 – 3 வருடங்களில் இந்திய வீரர்கள் ரன்கள் குவிக்க தடுமாறுவதால் இந்திய பேட்டர்களின் தன்னம்பிக்கை குறைந்து போய் காணப்படுகிறது. சொந்த மண்ணில் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள் ஆனால் உங்களின் வீரர்கள் வளரவில்லை”

IND

என தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங் விராட் கோலி – ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா விளையாடிய போது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்கள் தயாரிக்கப்பட்டதாலேயே அதிக அளவு வெற்றிகளை பெற முடிந்ததாக குறை கூறியுள்ளார். ஆனால் தற்போது ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்துவிட்டதால் இனி இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு ஈடாக பேட்டிங் எடுபடக்கூடிய மைதானங்கள் தயாரிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : 11 வருட ஏக்கத்தை ரோஹித் – டிராவிட் கூட்டணி முடிவுக்கு கொண்டு வருவாங்க – சச்சின் நம்பிக்கை

மேலும் விராட் கோலி – ரவி சாஸ்திரி தலைமையில் சமீப காலங்களாக இந்திய பேட்டிங் வீரர்கள் ரன்கள் குவிக்க மறந்து விட்டதாகவும் தரமான பந்துவீச்சாளர்கள் இருந்த காரணத்தினாலேயே விராட் கோலியால் இவ்வளவு வெற்றிகளை பெற முடிந்ததாகவும் மறைமுகமாக அவர் குறை கூறியுள்ளார்.

Advertisement