11 வருட ஏக்கத்தை ரோஹித் – டிராவிட் கூட்டணி முடிவுக்கு கொண்டு வருவாங்க – சச்சின் நம்பிக்கை

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருந்த காலத்தில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஐசிசி நடத்திய உலக கோப்பை தொடர்களில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியும், கேப்டன் பதவியிலிருந்து விராத் கோலியும் வெளியேறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து புதிய கேப்டனாக ரோஹித்தும், புதிய பயிற்சியாளராக டிராவிட்டும் அணிக்குள் இணைந்துள்ளனர்.

shastri

- Advertisement -

கடைசியாக 2011ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது 11 ஆண்டுகளாக இந்திய அணி அடுத்த உலகக் கோப்பைக்காக காத்திருக்கிறது. ஏற்கனவே 1983-ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய பின்னர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை தவிர இந்திய அணி பெரிய வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த 11 ஆண்டு ஏக்கம் நிச்சயம் ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோரது கூட்டணியின் மூலம் முடிவுக்கு வரும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஏப்ரல் மாதம் வந்தால் இந்திய அணி உலக கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகிறது. இப்படி நீண்ட நாட்களாக நாம் அனைவரும் ஒரு உலககோப்பைக்காக தான் காத்திருக்கிறோம்.

dravid

நிச்சயம் உலகக்கோப்பை என்பது அனைவருக்குமே ஒரு ஸ்பெஷல் தான். அந்த வகையில் என்னை பொறுத்த வரை தற்போது உள்ள டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோரது கூட்டணியில் இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் டிராவிட் நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதனால் போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அவருக்கு தெரியும். அதேபோன்று ரோஹித்தும் நல்ல அனுபவம் கொண்டவர்.

- Advertisement -

இதையும் படிங்க : 36 வயசுல கூட இப்படி ஒரு பிட்னஸா? 23 வயசு பையன் மாதிரி சுறுசுறுப்பா இருக்காரு – ஹர்பஜன் புகழாரம்

எனவே இவர்கள் இருவரது ஜோடி நிச்சயம் இந்திய அணியின் முன்னேற்றத்திற்கு சரியான திட்டங்களை வகுத்து அடுத்தடுத்து அணியை முன் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதோடு நிச்சயம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை அவர்கள் கைப்பற்றி மேலும் ஒரு உலக கோப்பையை இந்திய அணிக்காக பெற்று தருவார்கள் என சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement