36 வயசுல கூட இப்படி ஒரு பிட்னஸா? 23 வயசு பையன் மாதிரி சுறுசுறுப்பா இருக்காரு – ஹர்பஜன் புகழாரம்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இந்த மூன்று போட்டிகளிலுமே இந்திய அணி தோற்று இருந்தாலும் மூன்றாவது போட்டியில் சில வீரர்களின் செயல்பாடு இந்திய அணிக்கு திருப்திகரமாக அமைந்தது. அதன்படி வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் 39 ரன்கள் குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

pant4

- Advertisement -

மேலும் தீபக் சாஹர் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இப்படி மூன்றாவது போட்டியில் சில சாதகமான அம்சங்கள் இந்திய அணிக்கு கிடைத்தன. இந்நிலையில் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடிய வீரராக அணியில் சீனியர் வீரர் ஷிகர் தவான் திகழ்ந்தார்.

ஏனெனில் சமீப காலமாகவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு வந்த தவான் மீண்டும் தற்போது இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுத்து மூன்று போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். முதல் போட்டியின்போது 79 ரன்கள் எடுத்த அவர் மூன்றாவது போட்டியில் 61 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவானின் இந்த கம்பேக் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் :

dhawan

தற்போது தவானுக்கு 36 வயது இருந்தாலும் 2023 மூன்றாம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அளவிற்கு தகுதியான வீரராக தான் அவர் இருக்கிறார். அவரின் இந்த கம்பேக் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் அவர் அணிக்காக பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் மிகவும் உன்னிப்பாக செயல்படக்கூடியவர். அதோடு தற்போது 36 வயதாகும் அவர் 23 வயது வீரரான இஷான் கிஷனை போன்று சுறுசுறுப்பாக திகழ்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : பார்மில் இல்லாதவருக்கு வாய்ப்பு – காரணமே இல்லாமல் ஓரங்கட்டபட்ட அஷ்வின் – பி.சி.சி.ஐ சதிவேலை

இந்த வயதிலும் அவர் இவ்வாறு சுறுசுறுப்பாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவிற்கு தனது உடற்தகுதியின் மீது அவர் கவனம் செலுத்தி வருகிறார். என்னை பொறுத்தவரை நிச்சயம் அவர் இன்னும் சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு விளையாடும் அளவிற்கு அவரது உடல் தகுதி சிறப்பாக உள்ளது என ஹர்பஜன்சிங் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement