உலககோப்பை வரலாற்றில் சச்சின்-சேவாக் சாதனையை முறியடித்து வங்கதேச ஜோடி – சரித்திர சாதனை

Shakib-and-Mushfiqur
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-வது போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியின் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய வங்கதேச அணியின் சீனியர் வீரர்களான ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகியோரது சாதனையை முறியடித்து உலக கோப்பை வரலாற்றில் சரித்திரம் படைத்துள்ளனர்.

அந்தவகையில் இன்றைய போட்டியில் வங்கதேச அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷாகிப் மற்றும் முஷ்பிகுர் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 96 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 40 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதன்மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஜோடியாக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களான சேவாக் மற்றும் சச்சின் ஆகியோரது சாதனையை இவர்கள் இருவரும் முறியடித்துள்ளனர். சச்சின் மற்றும் சேவாக் ஆகியோர் உலகக் கோப்பை போட்டிகளில் 20-இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடி 971 ரன்களை குவித்து அசத்தியிருந்தனர். அவர்களது இந்த சாதனையை தகர்த்த ஷாகிப் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் 19 இன்னிங்ஸ்களில் 972 ரன்கள் குவித்து அவர்களது சாதனையை முறியடித்துள்ளனர்.

இதையும் படிங்க : கிங் கோலியின் படம் சேர்ப்பு.. உலக அரங்கில் 128 வருடம் கழித்து கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அங்கீகாரம்

இந்த பட்டியலில் ஹைடன் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோர் இணைந்து 20 இன்னிங்ஸ்களில் 1220 ரன்கள் குவித்துள்ளது முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் 8 முறை 50+ பாட்னர்ஷிப் அமைத்த சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரது சாதனையை இன்றைய போட்டியின் மூலம் அவர்கள் இருவரும் சமம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ஹைடன் மற்றும் கில்கிறிஸ்ட் 12 முறை 50+ பாட்னர்ஷிப் அமைத்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement