அவங்களே 2 டைம் கேட்டாங்க.. ஆனா கல் நெஞ்சத்துடன் ஷாகிப் மறுத்துட்டாரு.. பின்னணியை பகிர்ந்த பிஷப்

Ian Bishop
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அந்த போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காலதாமதத்தால் அவுட் கொடுக்கப்பட்டது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது அப்போட்டியில் பேட்டிங் செய்வதற்காக வந்த மேத்தியூஸ் கடைசி நேரத்தில் தம்முடைய ஹெல்மெட் பழுதாகியிருந்ததை பார்த்தார்.

அதனால் தம்முடைய அணியிடமிருந்து புதிய ஹெல்மட்டை அவர் வாங்கும் போது காலதாமதம் செய்ததாக புகார் செய்த வங்கதேசம் அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்குமாறு நடுவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதை சோதித்த நடுவர்கள் குழுவினர் விதிமுறைப்படி முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் முதல் பந்தை எதிர்கொள்ள 2 நிமிடங்கள் முடிவதற்குள் மேத்யூஸ் வராத காரணத்தால் அவுட் கொடுத்தார்கள்.

- Advertisement -

கல் நெஞ்சம்:
அதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் நிலைமையை எடுத்துச் சொல்லியும் சாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியினர் தங்களுடைய முடிவை வாபஸ் பெறாதது ரசிகர்களையும் கோபமடைய வைத்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஷாகிப்பை பந்து வீச்சில் அவுட்டாக்கிய போது “டைம் ஆச்சு கிளம்புங்க” என்ற வகையில் மேத்யூஸ் பதிலடி கொடுத்தார். அத்துடன் போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளாததும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இறுதியாக சாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்த மேத்யூஸ் வங்கதேசம் மிகவும் கேவலமான அவமான செயலை செய்துள்ளதாக போட்டியின் முடிவில் தெரிவித்தார். அத்துடன் 2 நிமிடங்கள் முடிவதற்குள் தாம் களத்திற்கு வந்து விட்டதாக தெரிவித்த அவர் அதற்கான ஆதாரத்தையும் ஐசிசியிடம் சமர்ப்பித்து நடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த பரபரப்பான தருணத்தில் களத்தில் இருந்த மரைஸ் எராஸ்மாஸ் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகிய நடுவர்களே இப்படி ஒரு நேர்மைக்கு புறம்பான அவுட்டை கொடுக்கக்கூடாது என்று விரும்பியதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரர் இயன் பிசப் கூறியுள்ளார். அதற்காக நடுவர்கள் இருவரும் உங்களுடைய முடிவை வாபஸ் பெறுமாறு 2 முறை கேட்டுக்கொண்டும் சாகிப் கல் நெஞ்சுத்துடன் மறுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஃபைனல் தேவையில்ல.. அவங்களோட மேட்ச் வெச்சு உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொடுங்க.. ப்ராட் ஹோக் கருத்து

இது பற்றி வர்ணனையாளராக செயல்படும் அவர் நேரலையில் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்தது பின்வருமாறு. “நேரம் முடிந்து விட்டதா அல்லது இல்லையா என்பது பற்றி வெவ்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அம்பயர்கள் நீங்கள் இந்த அவுட்டை வாபஸ் பெற விரும்புகிறீர்களா? என்று சாகிப் அல் ஹசனிடம் 2 முறை கேட்டார்கள். ஏனெனில் சாகிப் தான் இந்த சர்ச்சையை துவங்கினார். இறுதி வரை அவர் நடுவர்களிடம் 2 முறையும் அவுட் வேண்டுமென்று சொன்னார்” என்று கூறினார்.

Advertisement