ஃபைனல் தேவையில்ல.. அவங்களோட மேட்ச் வெச்சு உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொடுங்க.. ப்ராட் ஹோக் கருத்து

Brad Hogg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை முழுவதுமாக தனதாக்கி செமி ஃபைனல் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லாமல் ஓய மாட்டோம் என்ற வகையில் மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம்.

ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கிரிக்கெட்டின் அசுரனாக திகழும் ஆஸ்திரேலியாவை முதல் போட்டியிலேயே 200 ரன்களை துரத்தும் போது 2/3 என சரிந்தும் விராட் கோலி – ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து பரம எதிரி பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக உலக கோப்பையில் வென்று தங்களுடைய வெற்றி சரித்திரத்தையும் கௌரவத்தையும் தக்க வைத்தது.

- Advertisement -

கோப்பையை கொடுங்க:
அதே வேகத்தில் ஷமியின் மிரட்டலான பந்து வீச்சால் சவாலான நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் தோற்கடித்த இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் வெறும் 238 ரன்களை கட்டுப்படுத்தும் போது 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதற்கிடையே ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தையும் வீழ்த்திய இந்தியா 2023 ஆசிய கோப்பை ஃபைனல் போலவே இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி மற்றுமொரு மாஸ் வெற்றி பெற்றது.

அந்த நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான தோல்வியை தவிர்த்து 300 – 400 ரன்களை அசால்ட்டாக அடித்து நொறுக்கி எதிரணிகளை துவம்சம் செய்து செமி ஃபைனலுக்கும் தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா மட்டுமே இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அணியையும் கொல்கத்தாவில் 326 ரன்கள் அடித்து பின்னர் வெறும் 83 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று இத்தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக மிரட்டி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்த இந்தியாவுக்கு ஃபைனல் இல்லாமலேயே கோப்பையை கொடுக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் பாராட்டியுள்ளார். குறிப்பாக உலகின் 11 சிறந்த வீரர்களை கொண்ட உலக லெவன் அணியுடன் இந்தியாவை ஒரு போட்டியில் மோத வைத்து இந்த உலகக் கோப்பையை இத்தோடு முடியுங்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: வடிகட்டுன முட்டாள்தனம்.. தேவையின்றி இந்திய வீரரை விமர்சித்த ஹபீஸை.. வெளுத்து வாங்கிய மைக்கேல் வாகன்..

“நேற்று இரவு நடைபெற்ற (தென்னாப்பிரிக்கா) போட்டிக்கு பின் இந்தியாவுக்கு ஃபைனல் தேவையில்லை என்பது போல் தெரிகிறது. இந்தியா மற்றும் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் போட்டியை நடத்தி இத்தொடரை முடியுங்கள். ஏனெனில் அவர்கள் சிலிர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement