இவனுங்க இப்படி பண்ணா நாங்க எப்படி ஜெயிக்க முடியும். இலங்கைக்கு எதிரான தோல்விக்கு பிறகு – ஷாகிப் அல் ஹசன் சாடல்

Shakib-al-Hasan
Advertisement

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதலாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி மோதியது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியானது தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்து முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் தோல்விக்கு காரணம் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தான் காரணம் என அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

நேற்று இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அந்த அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி 164 ரன்களுக்கு சுருண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக நஜ்முல் ஷாண்டோ 89 ரன்களை குவித்தாலும் மற்ற யாருமே அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதன் காரணமாகவே பங்களாதேஷ் அணி 164 என்கிற குறைவான ரன்களை குவித்தது. பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியில் கருணரத்னே, பதும் நிஷாங்கா, குசால் மென்டிஸ் ஆகியோரது விக்கெட்டைடை பங்களாதேஷ் அணி விரைவில் வீழ்த்தியிருந்தாலும் அவர்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

- Advertisement -

சமர விக்ரமா மற்றும் அசலங்கா ஆகியோரது மிகச்சிறப்பான ஆட்டம் காரணமாக இலங்கை அணி 39-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் : இந்த மைதானம் 300 ரன்கள் அடிக்கக்கூடிய மைதானம் கிடையாது. எனவே 220 ரன்கள் முதல் 230 ரன்கள் வரை அடித்தால் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : என்னது பதிரானா மலிங்காவின் ஸ்டைலை காப்பி பண்றாரா? அவரோட விஷயமே வேற – சிறுவயது கோச் பேட்டி

ஆனால் ஒரு யூனிட்டாக நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. எங்களது அணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணமாக நான் கருதுகிறேன். இன்னும் இரண்டு நாட்களில் முக்கியமான போட்டி வருகிறது. நிச்சயம் அந்த போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப விரும்புகிறோம் என ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement