என்னது பதிரானா மலிங்காவின் ஸ்டைலை காப்பி பண்றாரா? அவரோட விஷயமே வேற – சிறுவயது கோச் பேட்டி

Pathirana-and-Malinga
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 20 வயது வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து தோனியும் மதீஷா பதிரானா ஒரு ஸ்பெஷல் பிளேயர் என்றும் அவரை ஐசிசி தொடர்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அட்வைஸ் செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இலங்கை கிரிக்கெட் அணியானது எதிர் வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் பதிரானாவை இணைத்து விளையாடி வருகிறது.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார், அவரது பவுலிங் ஸ்டைல் முன்னாள் வீரர் மலிங்காவை போன்றே இருப்பதால் அவரை ரசிகர்கள் பலரும் “பேபி மலிங்கா” என்று அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பதிரானா மலிங்காவின் ஸ்டைலை பாலோ செய்யவில்லை என்றும் அது இயற்கையாகவே அவருக்கு இருக்கும் திறன் என அவரது சிறுவயது பயிற்சியாளரான பிலால் பாசி என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் சிறுவயதில் இருந்தே பதிரானாவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். அவரிடம் இயல்பாகவே வேகமாக பந்துவீசும் திறன் இருக்கிறது. அதோடு மலிங்காவின் ஸ்டைலை அவர் பாலோ செய்வதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த விடயம் உண்மை கிடையாது. பதிரானாவிற்கு இயற்கையாகவே அந்த ஸ்டைலில் தான் பந்துவீச வருகிறது.

இதையும் படிங்க : வீடியோ: 5 பால்.. 17 ரன் தேவை.. 6,6,6.. சூப்பர் ஓவரில் அடித்து நொறுக்கி ஆட்டத்தை முடித்த ரிங்கு… இத விட ஒரு ஃபினிஷர் இருக்க முடியுமா..

அதோடு மற்ற பவுலர்களைப் போல அவர் வேகத்திற்காக கூடுதலாக எந்த ஒரு முயற்சியையும் எடுப்பதில்லை. அவருடைய யார்க்கர் மற்றும் பவுன்சர் ஆகியவை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என பிலால் பாசி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement