நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் நாங்க தோக்க இதுவே காரணம் – தொடர் தோல்விக்கு பின் ஷாகிப் அல் ஹசன் வருத்தம்

BAN-vs-NED
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28-ஆவது லீக் போட்டியானது அக்டோபர் 28-ஆம் தேதியான இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்களை குவித்தது. நெதர்லாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பால் மெக் கீரன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசியதாகவே நினைக்கிறேன். ஆனாலும் நாங்கள் நெதர்லாந்து அணியை 160-170 ரன்களில் நிப்பாட்டி இருக்க வேண்டும். அதனை எங்களால் செய்ய முடியாமல் போனது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த தொடரில் எங்களது செயல்பாடு எனக்கு திருப்தியாக இதுவரை அமையவில்லை. இந்த இடத்தில் நாங்கள் இருப்பது வருத்தம் அளிக்கும் ஒன்றாகவே உள்ளது.

இதையும் படிங்க : தெ.ஆ வையே சாய்ச்சவங்க.. உங்கள சும்மா விடுவாங்கலா? பங்களாதேஷை மண்ணை கவ்வ வைத்த நெதர்லாந்து – அசத்தல் வெற்றி

இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறோம். தற்போதைக்கு எங்களது மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் குறித்து சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இது முழுமையான பங்களாதேஷ் அணி கிடையாது இருந்தாலும் நாங்கள் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் போது எங்களுடன் ரசிகர்கள் துணை நிற்கிறார்கள் என ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement