BAN vs ENG : நேத்து மழை பெய்ஞ்சதால தான் அந்த முடிவை எடுத்தேன். தோல்விக்கு பிறகு – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

Shakib
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த தொடரின் ஏழாவது போட்டி இன்று தர்மசாலா நகரில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் குவித்து அசத்தியது. இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மாலன் 140 ரன்களையும், ஜோ ரூட் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் : இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்றுதான். ஆனால் நேற்று இரவு இந்த மைதானத்தில் மழை பெய்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் என்று நினைத்தே நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன்.

- Advertisement -

ஆனால் நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்கவில்லை. இங்கிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிராக சற்று சறுக்களை சந்தித்தாலும் அவர்கள் நமக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி விடுவார்கள். இந்த மைதானத்தில் கடைசி 10 ஓவர்கள் நாங்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் 350 ரன்கள் சேசிங் செய்வது என்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான் இருந்தாலும் அதற்கு ஏற்ற திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம்.

இதையும் படிங்க : ENG vs BAN : டாஸ் வென்று தப்பு கணக்கு போட்ட வங்கதேச அணி.. பொளந்து கட்டிய இங்கிலாந்து – அசத்தல் வெற்றி

ஆனாலும் எங்களால் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒருகட்டத்தில் 380 முதல் 390 ரன்கள் வரை குவிக்கும் என்று நினைத்திருந்த வேளையில் இறுதி கட்டத்தில் நாங்கள் அவரை கட்டுப்படுத்தினோம். அதேபோன்று 320 ரன்கள் வரை இருந்திருந்தால் இந்த மைதானத்தில் சேசிங் செய்ய சரியாக இருந்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்களால் அதுவும் முடியாமல் போனது அடுத்து சென்னையில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி எங்களுக்கு முக்கியமான ஒன்று என்றும் ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement