இப்போவும் கம்பேக் கொடுத்து அவங்க முகத்துல சிரிப்பை கொண்டு வருவோம்.. வெளியேறிய பின் சாகிப் பேட்டி

Shakib Al Hasan
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 31ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் தொடர் தோல்விகளை நிறுத்தி 3வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் மிகவும் சுமாராக விளையாடி 45.1 ஓவரில் வெறும் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமதுல்லா 56, லிட்டன் தாஸ் 45, கேப்டன் சாகிப் 43 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 205 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 68, பகார் ஜமான் 81 ரன்கள் அடித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

கம்பேக் கொடுப்போம்:
அதனால் பாபர் அசாம் 9 ரன்களில் அவுட்டானாலும் முகம்மது ரிஸ்வான் 26*, இப்திகார் அகமது 17* ரன்கள் எடுத்து 32.3 ஓவரிலேயே பாகிஸ்தானை எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தும் 6வது தோல்வியை பதிவு செய்த வங்கதேசம் இந்த உலகக் கோப்பையிலிருந்து முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் முதல் 10 ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்த தங்களுடைய அணிக்கு தாம் உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதே தோல்வியை கொடுத்ததாக வங்கதேச கேப்டன் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் வென்று மனதளவில் உடைந்துள்ள தங்களுடைய நாட்டு ரசிகர்களை சிரிக்க வைப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தும் நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து பெரிய ரன்கள் எடுக்கவில்லை. சில பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அதை பெரியதாக மாற்றவில்லை. அந்த வகையில் எங்களை பேட்டிங்கில் ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினோம். அதற்கு பாகிஸ்தானுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அவர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களுடைய டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை”

இதையும் படிங்க: எங்க டீம்ல அவர் மட்டும் 20-30 ஓவர் நின்னு ஆடுனா எங்க ஆட்டமே வேறலெவல் ஆயிடும் – வெற்றிக்கு பின்னர் பாபர் அசாம் பேட்டி

“என்னுடைய தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் நானும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. இருப்பினும் இப்போட்டியில் அதிர்ஷ்டத்துடன் சில ரன்கள் அடுத்ததால் தற்போது நன்றாக உணர்கிறேன். நாங்கள் ஒன்று சேர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. அடுத்த 2 போட்டிகளில் அதை செய்து கம்பேக் கொடுப்போம். இத்தொடரில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுடைய ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். அவர்களுடைய முகத்தில் நாங்கள் புன்னகையை கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

Advertisement