எங்க டீம்ல அவர் மட்டும் 20-30 ஓவர் நின்னு ஆடுனா எங்க ஆட்டமே வேறலெவல் ஆயிடும் – வெற்றிக்கு பின்னர் பாபர் அசாம் பேட்டி

Babar-Azam
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை குவித்தது. பங்களாதேஷ் அணி சார்பாக துவக்க வீரர் லிட்டன் தாஸ் 45 ரன்களையும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களையும், முகமதுல்லா 56 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி சார்பாக ஷாஹின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் தொடர்ந்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபீக் 68 ரன்களும், பக்கர் ஜமான் 81 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இன்னும் தங்களது அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மூன்று வகையான துறைகளிலும் அற்புதமாக செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பக்கர் ஜமான் 20-30 ஓவர் வரை நின்று பேட்டிங் செய்து விட்டால் அந்த போட்டி நிச்சயம் வித்தியாசமான போட்டியாக மாறிவிடும். அந்த அளவிற்கு அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். இன்று அவர் தனது அதிரடியான ஆட்டத்தை விளையாடினார். அவரது பேட்டிங்கை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இனிவரும் இரண்டு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்று அதன்பின் என்ன நடக்கிறது? என்பதை காணவிருக்கிறோம்.

இதையும் படிங்க : முதல் அணியாக வங்கதேசத்தை நாக் அவுட் செய்த பாகிஸ்தானுக்கு.. செமி ஃபைனல் வாய்ப்பு இன்னும் இருக்கா?

இந்த போட்டியில் எங்களது அணியின் சார்பாக பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி துவக்கத்திலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். மிடில் ஓவர்களிலும் பங்களாதேஷ் அணியின் வீரர்களை பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு விடாமல் எங்களது அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த மைதானத்தில் இந்திய ரசிகர்கள் எனக்கும் எங்களது அணிக்கும் தந்த வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement