கனடாவில் அம்பயரிடம் திமிர்தனத்தை காட்டிய ஷாகிப்.. வெற்றியை எதிரணிக்கு கொடுத்த அம்பயர்.. நடந்தது என்ன?

Shakib Al Hasan 2
- Advertisement -

வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் கடந்த காலங்களில் நடுவர்களிடம் மிகவும் திமிர்த்தனமாக நடந்து கொண்டதை உலகமே அறியும். குறிப்பாக 2021ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற ஒரு உள்ளூர் டி20 போட்டியில் தம்முடைய அணிக்கு சாதகமாக நடுவர் தீர்ப்பு வழங்கவில்லை. அதனால் கோபமடைந்த சாகிப் அந்த நடுவருக்கு முன்பாக ஸ்டம்ப்புகளை காலால் எட்டி உதைத்து பிடுங்கி எறிந்து மிரட்டினார்.

அது வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே போல 2023 பிபிஎல் தொடரில் தமக்கு ஒய்ட் வழங்காததற்காக “ஏய் ஏய்” என்று கத்திக் கொண்டே சென்ற அவர் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். இந்த சூழ்நிலையில் கனடாவில் 2024 குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மீண்டும் திமிர்தனம்:
அதில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பங்ளா டைகர்ஸ் மற்றும் டோரண்டோ நேஷனல் அணிகள் மோதின. இருப்பினும் அந்தப் போட்டி மழை மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையால் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பின் சூப்பர் ஓவரை நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்கலாம் என்று நடுவர்கள் முடிவு எடுத்தனர்.

அப்போது டாஸ் வீசுவதற்கு டொரன்டோ கேப்டன் வந்து விட்டார். ஆனால் டாஸ் வீசுவதற்கு வராத பங்களா டைகர்ஸ் அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் போட்டியை மொத்தமாக ரத்து செய்யுமாறு நடுவர்களிடம் சொன்னார். அத்துடன் ஒருவேளை சூப்பர் ஓவர் நடத்தப்பட்டால் அதில் தங்களுடைய அணி விளையாடாது என்றும் சாகிப் அறிவித்தார். குறிப்பாக மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தைப் பிடித்ததன் காரணமாக பங்ளா டைகர்ஸ் அணி எலிமினேட்டரில் விளையாடாமல் நேரடியாக குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெறும்.

- Advertisement -

அதன் காரணமாக சூப்பர் ஓவரில் தங்களால் விளையாட முடியாது போட்டியை ரத்து செய்யுங்கள் என்று அம்பயர்களிடம் ஷாகிப் மறுத்து விட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத நடுவர்கள் டொரன்டோ அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். மறுபுறம் விதிமுறையை மதிக்காமல் விளையாட மறுத்த ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்ளா டைகர்ஸ் அணி நாக் அவுட் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: யாரும் எதையும் நம்பாதீங்க.. நான் என் குடும்பத்தோட நல்லா இருக்கேன் – வங்கதேச வீரர் வெளியிட்ட அறிக்கை

அந்த வகையில் திமிர்த்தனம் மற்றும் பிடிவாதத்தால் ஷாகிப் அல் ஹசனின் அணி நாக் அவுட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து குவாலிபயர் 2 போட்டியில் விளையாடிய டொரன்டோ அணி பிராம்ப்டன் அணியை தோற்கடித்தது. அதனால் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மான்ட்ரெல் டைகர்ஸ் அணியை எதிர்கொள்ள டொரண்டோ தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement