யாரும் எதையும் நம்பாதீங்க.. நான் என் குடும்பத்தோட நல்லா இருக்கேன் – வங்கதேச வீரர் வெளியிட்ட அறிக்கை

Das
- Advertisement -

வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான லிட்டன் தாஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக அறிமுகமாகி இதுவரை 41 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள், 89 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியின் போதும் அவர் கொல்கத்தா அணிக்காக விளையாடியிருந்தார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அசாதாரண சூழல் நிலவு வருவதாகவும் அந்த காரணங்களால் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

- Advertisement -

இந்த கலவரத்தின் போது அந்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்கள் தீக்கிரையாகின என்றும் செய்திகள் பரவி இருந்தது. இந்நிலையில் போராட்டத்தின் போது தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில நாட்களாகவே என்னுடைய வீடு எரிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது. என்னுடைய குடும்பத்தினரும் நானும் முழு பாதுகாப்பாக உள்ளோம்.

- Advertisement -

எங்களுடைய தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதெல்லாம் ஒரு வதந்தி தான் அதை யாரும் நம்ப வேண்டாம். நாம் ஒன்றாக இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அதில் மட்டும் கவனத்தை செலுத்துவோம். அதை தவிர்த்து வதந்திகள் தேவையில்லாத ஒன்று.

இதையும் படிங்க : இலங்கை தோல்விக்காக கவலைப்பாடாதீங்க.. அந்த தொடரில் இந்திய அணி ஃபீஸ்ட் மாதிரி விளையாடும்.. டிகே கருத்து

என்னுடைய நாட்டிற்கு நான் நன்றியுள்ளனாக இருக்க விரும்புகிறேன். இந்த நாட்டில் எல்லாவித வன்முறைகளையும் விலக்கி ஒற்றுமையாக வாழ்வோம் என்று நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என லிட்டன் தாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement