இலங்கை தோல்விக்காக கவலைப்பாடாதீங்க.. அந்த தொடரில் இந்திய அணி ஃபீஸ்ட் மாதிரி விளையாடும்.. டிகே கருத்து

Dinesh Karthik 4
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடிய 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு கூட தகுதி பெறவில்லை. மறுபுறம் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா ஐசிசி ஒருநாள் தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது.

அப்படியிருந்தும் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் இந்தியா அடுத்ததாக வரும் 2025 ஜனவரி இறுதியில் தான் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. எனவே அதற்குள் எப்படி தயாராகி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல முடியும் என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மிருகம் மாதிரி:
இந்நிலையில் இலங்கையிடம் சந்தித்த இந்த தோல்வியை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஐசிசி தொடர்களில் தங்களுடைய முழு பலத்துடன் களமிறங்கி எதிரணிகளை தோற்கடிக்கும் திறமை இந்தியாவிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா மிருகம் போல கம்பேக் கொடுக்கும் என்று கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்பாக நாம் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம். எனவே அடுத்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கு முன்பாக நமது அணியில் நிறைய மாற்றங்கள் வரும். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது”

- Advertisement -

“அந்த தொடரில் இலங்கையில் விளையாடிய தற்போதைய அணியை விட கொஞ்சம் வித்தியாசமான இந்திய அணி விளையாடும் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தையும் விட ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் இந்தியா எப்போதுமே தங்களுடைய முழு பலத்துடன் சேர்ந்து வந்து ஃபீஸ்ட் (மிருகம்) போல விளையாடும். அப்போது மற்ற அணிகள் வாவ் இந்த இந்திய அணி எவ்வளவு திறமை வாய்ந்தது என்பது எங்களுக்கு தெரியும் என்று சொல்வார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரசித் கானை தெறிக்க விட்ட பொல்லார்ட்.. போன்ற யாருமே செய்யாத உலக சாதனை.. மும்பை ரசிகர்கள் வருத்தம்

அவர் கூறுவது போல இலங்கைத் தொடரில் ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடவில்லை. அத்துடன் இலங்கை அணி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு மொத்தமாக தகுதி பெறவில்லை. ஆனால் கடந்த 15 வருடங்களில் நடைபெற்ற 10க்கு 9 ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்தியா தொடர்ச்சியாக குறைந்தபட்சம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement