ரசித் கானை தெறிக்க விட்ட பொல்லார்ட்.. யாருமே செய்யாத தனித்துவ சாதனை.. மும்பை ரசிகர்கள் வருத்தம்

Pollard 2
- Advertisement -

இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட 2024 ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சௌதர்ன் பிரேவ்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் 127 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய சௌதர்ன் அணிக்கு அலெக்ஸ் டேவிஸ் 28, கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 28 ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஆண்ட்ரே ப்ளட்சர் 1, டு பிளாய் 5, லாரி எவன்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அப்போது மிரட்டலாக விளையாடிய கைரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

உலக சாதனை:
குறிப்பாக ரசித் கான் வீசிய 5 பந்துகளைக் கொண்ட ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6 என அடுத்தடுத்த சிக்சர்சளை பறக்க விட்ட அவர் 30 ரன்களை விளாசினார். அதே வேகத்தில் பேட்டிங் செய்த அவர் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 45 (23) ரன்கள் குவித்து தனது அணியை ஒரு பந்து மீதம் வைத்து வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு சர்வதேச டி20 போட்டியில் அகிலா தனஞ்செயாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பொல்லார்ட் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த வரிசையில் தற்போது இப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கானுக்கு எதிராக அவர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக 2 வெவ்வேறு ஃபார்மட்டில் (டி20 மற்றும் ஹண்ட்ரட்) ஒரு ஓவரின் அனைத்து பந்திலும் சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பொல்லார்ட் படைத்துள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங் போன்ற மற்ற யாருமே 2 ஃபார்மெட்டில் ஒரு ஓவரின் அனைத்து பந்துகளிலும் சிக்சர்கள் அடித்ததில்லை. அந்த வகையில் 37 வயது மட்டுமே பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக நீண்ட காலம் மேட்ச் வின்னராக செயல்பட்டார்.

இதையும் படிங்க: கேரியர் முடியல.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி அங்க நடந்தா ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு.. ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆனால் 2022 சீசனில் சுமாராக செயல்பட்டதற்காக அவரை பெஞ்சில் அமர வைத்த மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்தது. அதை தொடர்ந்து மும்பை அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் பொல்லார்ட் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் அதிரடியாக விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட அவரை ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக பார்ப்பது மும்பை ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

Advertisement