விராட் கோலி, ரோஹித்தெல்லாம் கிடையாது. உலககோப்பை தொடரில் சிறப்பான ரெக்கார்டை வைத்திருக்கும் – ஷாகிப் அல் ஹசன்

Shakib
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 13-வது 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் யார்? அதிக விக்கெட்டுகளை எடுக்கப்போகும் பவுலர் யார்? மேலும் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை பெறப்போகும் அந்த வீரர் யார்? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் சமூக வலைதளத்தில் அதிகளவு விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கும் வீரர்களின் ஒரு சில ரெக்கார்டுகள் குறித்த விவரமும் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாளை துவங்க உள்ள இந்த உலகக் கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் நகரில் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னதாக தற்போது ஆக்டிவா இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் யார்? என்பது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி, வார்னர், ரோகித் போன்ற முன்னணி வீரர்கள் பல உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருந்தாலும் அவர்களை விட அதிக ரன்கள் குவித்த வீரராக வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த 2006-ஆம் ஆண்டு அறிமுகமான ஷாகிப் இதுவரை 29 உலக கோப்பை இன்னிங்ஸ்களில் விளையாடி 1147 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : ஒற்றை ஹிந்தி பதிலால் அரங்கை சிரிக்க வைத்த ரோஹித்.. புரியாமல் பாபரிடம் விளக்கம் கேட்ட பட்லர்

அவருக்கு அடுத்து 2011, 2015, 2019, ஆம் ஆண்டுகளில் உலக கோப்பையில் பங்கேற்ற விராட் கோலி 26 இன்னிங்ஸ்களில் 1030 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரரான வார்னர் 18 இன்னிங்ஸ்களில் 992 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 17 இன்னிங்ஸ்களில் 9782 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து கேன் வில்லியம்சன் 22 இன்னிங்ஸ்களில் பங்கேற்று 911 ரன்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement