உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் முதல் முறையாக முழுவதுமாக அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பங்கேற்ற பயிற்சி போட்டிகளில் நிறைவு பெற்றன. இருப்பினும் அதில் இந்தியா பங்கேற்ற 2 போட்டிகளும் மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அந்த நிலைமையில் அக்டோபர் 4ஆம் தேதி அகமதாபாத் நகரில் 2023 உலகக் கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலாவதாக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு ரோகித் சர்மா, பாபர் அசாம், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட அனைத்து கேப்டன்களும் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு வரவழைக்கப்பட்டார்கள்.
ரோஹித்தின் பதில்:
அதைத்தொடர்ந்து முக்கியமான கேள்விகளுக்கு கேப்டன்கள் பதிலளிக்கும் மெகா செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது “2019 உலகக்கோப்பை சமனில் முடிந்தும் அதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தும் கோப்பை இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட்டது சரியா? இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமா” என்று ஒரு செய்தியாளர் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதை வித்தியாசமான பல ரியாக்சன்களை கொடுத்துக்கொண்டே கேட்ட ரோகித் சர்மா “என்னப்பா. வெற்றியாளர்களை அறிவிக்க வேண்டியது என்னுடைய வேலை இல்லை” என்று ஹிந்தியில் பதிலளித்தது அரங்கத்தில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. மறுபுறம் தங்களைப் பற்றி ஏதோ இந்தியில் பேசுகிறார்கள் என்பதை உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அருகில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் அதற்கான விளக்கத்தை கேட்க முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அத்துடன் 2 உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளையும் ரத்து செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு “மிகவும் ஜாலியாக 2 நாட்கள் விடுப்பில் இருந்தோம்” என்று சிரித்துக் கொண்டே ரோஹித் சர்மா மற்றொரு பதிலை கொடுத்தார். மேலும் உலக கோப்பையில் விளையாடுவது தம்முடைய மிகப்பெரிய கனவு என்று தெரிவித்த அவர் அனைத்து அணிகளுக்கும் இந்தியாவில் சிறந்த ஆதரவை மகிழ்ச்சியும் கொடுப்போம் என்று கூறினார்.
இதையும் படிங்க: 6 இந்தியர்கள்.. ஆல் டைம் இந்தியா – பாக் கனவு ஒருநாள் அணியை தேர்ந்தெடுத்த – வாசிம் அக்ரம்
அதே போல இந்தியாவில் முதல் முறையாக விளையாடினாலும் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவது போல ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ஹைதராபாத் பிரியாணி நன்றாக இருந்தது என்றும் ரவி சாஸ்திரி எழுப்பிய கேள்விக்கு பதில்ளித்தார். இறுதியாக அனைத்து கேப்டன்களும் அகமதாபாத் மைதானத்தில் உலக கோப்பை உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.