6 இந்தியர்கள்.. ஆல் டைம் இந்தியா – பாக் கனவு ஒருநாள் அணியை தேர்ந்தெடுத்த – வாசிம் அக்ரம்

Wasim Akram 3
- Advertisement -

ஆசிய கண்டத்தில் டாப் 2 கிரிக்கெட் அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் 90களுக்கு பின் உலக அணிகளுக்கு தொடர்ந்து சவாலை கொடுக்கும் பலம் வாய்ந்த அணிகளாக செயல்பட்டு வருகின்றன. அதில் இந்தியா 1983, 2011 உலகக் கோப்பைகளையும் 2007, 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று சற்று அதிக வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. அதற்கு நிகராக பாகிஸ்தானும் 1992 உலக கோப்பை போன்ற நிறைய வெற்றிகளை பெற்று சவாலான அணியாக இருக்கிறது.

அதே போல உலகிலேயே முதல் முறையாக 10,000 ரன்கள் அடித்த சுனில் கவாஸ்கர், அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர், மகத்தான ஆல் ரவுண்டர் கபில் தேவ், கேப்டனாக ஜொலிப்பதற்கு பிறந்த எம்எஸ் தோனி போன்ற ஏராளமான ஜாம்பவான் வீரர்களையும் இந்தியா உருவாக்கியுள்ளது. அதற்கு மகத்தான கேப்டன் மற்றும் ஆல் ரவுண்டர் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற அதிரடி வேக பந்து வீச்சாளர்கள், சயீத் அன்வர், இன்சமாம் போன்ற மகத்தான பேட்ஸ்மேன்களையும் பாகிஸ்தான் உருவாக்கிய பெருமைக்குரியது.

- Advertisement -

கனவு அணி:
இந்நிலையில் அப்படி மகத்தான வரலாறு கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒன்றாக கலந்த கனவு 11 பேர் ஒருநாள் அணியை வாசிம் அக்ரம் தேர்வு செய்துள்ளார். இம்ரான் கான் தலைமை தாங்கும் அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ள நிலையில் தமக்கு இடம் கொடுக்காத அவர் இது பற்றி பாக்ஸ் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் பேசியதற்கு பின்வருமாறு. “நான் சயீத் அன்வருடன் இந்த அணியை துவக்குகிறேன். 19 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார் சிறந்த ஃபீல்டர் இல்லை என்றாலும் பாகிஸ்தான் உருவாக்கிய மகத்தான பேட்ஸ்மேன் ஆல் ரவுண்டர்”

“அவருடன் துவக்க வீரராக வீரேந்திர சேவாக்கை தேர்ந்தெடுக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரர்களின் எண்ணங்களை மாற்றினார். அவருக்கு முன்பு வரை 3 ஸ்லிப், 1 கல்லி ஃபீல்டர்கள் இருப்பார்கள். ஆனால் அவர் அனைவரையும் அடித்து நொறுக்கி 2 முச்சதங்கள் அடித்துள்ளார். 3வது இடத்தில் 100 மதங்கள் அடித்துள்ள சச்சின் தேர்ந்தெடுக்கிறேன். அந்த இடத்தில் இன்சமாம் முதல் ரோஹித் உட்பட பலர் இருப்பதால் அனைவரையும் தேர்ந்தெடுப்பது கடினமாகும்”

- Advertisement -

“5வது இடத்தில் விராட் கோலி இல்லாமல் ஒரு பிளேயிங் லெவன் இருக்க முடியாது. 6வது இடத்தில் கேப்டனாக இம்ரான் கான் இருப்பார். பின்னர் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ கபில் தேவ் இருப்பார். அத்துடன் தோனி விக்கெட் கீப்பராக இருப்பார். இந்த அணியை யாராலும் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார். மேலும் ஒரே ஸ்பின்னராக சக்லைன் முஸ்டக்கை தேர்ந்தெடுத்துள்ள அவர் பும்ராவையும் ஆச்சரியப்படும் மொபைல் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் 3 மகத்தான பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – தினேஷ் கார்த்திக் தேர்வு

வாசிம் அக்ரம் இந்தியா – பாகிஸ்தான் கனவு ஒருநாள் அணி: சயீத் அன்வர், வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், ஜாவேத் மியான்தத், விராட் கோலி, இம்ரான் கான் (கேப்டன்) கபில் தேவ், எம்எஸ் தோனி (கீப்பர்), சக்லைன் முஸ்டாக், ஜஸ்பிரித் பும்ரா, வகார் யூனிஸ்

Advertisement