ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் 3 மகத்தான பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – தினேஷ் கார்த்திக் தேர்வு

Dinesh-Sachin
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ள வேளையில் நாளை அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத் நகரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த உலகக் கோப்பை குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் இந்த உலககோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்படப்போவது மட்டுமின்றி சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்து வருகிறார். அதோடு கிரிக்கெட் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

மேலும் சக இந்திய வீரர்களுடன் இருக்கும் உறவு, அவர்களுடன் பழகிய நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கு பிடித்த மூன்று கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேன்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ், இந்திய அணியின் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் தான் ஒருநாள் கிரிக்கெட்டின் மூன்று மகத்தான பேட்ஸ்மேன்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

எல்லாருமே விராட் கோலியின் ரெக்கார்டை பற்றி தான் பேசுகிறார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் என்னை பொருத்தவரை அவர் ரிச்சர்ட்ஸ், சச்சின் ஆகியோருக்கு இணையான ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இந்த நிலையை அடைவதற்கு விராட் கோலி மிகப்பெரிய உழைப்பை வெளிப்படுத்தி உள்ளார். கோலியை எனக்கு பர்சனலாகவும் ரொம்பவே தெரியும். அவர் உடன் நான் பலமுறை ஒன்றாக உணவு சாப்பிட்டு உள்ளேன்.

அவர் பிட்னஸ் விஷயத்தில் இந்திய அணிக்குள் புதிய மாற்றத்தையே கொண்டு வந்தவர். எப்பொழுதும் அவர் தனது உணவு கட்டுப்பாடுகளை மீறி நான் பார்த்ததே கிடையாது. நான் அவருடன் பல ஆண்டுகள் பயணத்துள்ளேன். அவருக்கு பிரியாணி மற்றும் இறைச்சி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் தன்னுடைய கரியருக்காகவும், பிட்னஸ்காகவும் முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.

இதையும் படிங்க : 2023 உலக கோப்பை கேப்டன்கள் விழாவில் தூங்கினேனா? பவுமா கொந்தளிப்பு.. நடந்தது என்ன

அதுமட்டும் இன்றி அனுஷ்கா சர்மா அவருடைய வாழ்க்கையில் வந்ததிலிருந்து பல மாற்றங்கள் நிகழ்ந்து ஆளே மாறிவிட்டார் என்றும், இன்றளவும் கிரிக்கெட்டிற்காக அதிக டெடிகேஷனுடன் பெரிய உழைப்பை கொடுத்து வருகிறார் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement