2023 உலக கோப்பை கேப்டன்கள் விழாவில் தூங்கினேனா? பவுமா கொந்தளிப்பு.. நடந்தது என்ன

Temba Bavuma
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் உச்சக்கட்டை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் கோப்பையை வெல்வதற்காக சொந்த மண்ணில் இந்தியா, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உலகின் டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அந்த வகையில் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இத்தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

அதில் சொந்த மண்ணில் 2011 போல ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்திய ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பங்கேற்ற பயிற்சி போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

- Advertisement -

பவுமா விளாசல்:
அதைத்தொடர்ந்து அக்டோபர் 4ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு அனைத்து அணிகளின் கேப்டன்கள் மற்றும் உலகக்கோப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.

அவர்களிடம் வழக்கம் போல உலகக் கோப்பை பற்றிய முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர்களும் பதில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா மட்டும் கீழ் கீழ்நோக்கி தலையை தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக நிகழ்ச்சி நடைபெறுவதால் சாப்பிட்ட அழுப்பில் அவர் உறங்குவதாக கிண்டலடிக்க துவங்கினர்.

- Advertisement -

அதிலும் சிலர் குறிப்பாக பள்ளிகளில் இது போல தான் நாங்கள் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு உறங்குவோம் என்று கிண்டலடித்தனர். மேலும் கேமரா அவரை போக்கஸ் செய்த போது “டீச்சர் பார்க்கிறார் சீக்கிரம் எழுந்துரியா” என்றும் வழக்கம் போல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பவுமாவை கலாய்த்து தள்ளினார்கள். அந்த வரிசையில் இங்கிலாந்தின் ரசிகர்கள் பக்கமான பார்மி ஆர்பி பவுமா தூங்குவது போலிருக்கும் படத்தை பதிவிட்டு மறைமுகமாக கலாய்த்தது.

அந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்தவுடன் சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படம் வைரலாவதை பார்த்த பவுமா கடுப்பாகி “நான் தூங்கவில்லை மாறாக கேமராவின் கோணத்தை” குற்றம் சாட்டுகிறேன் என்று பதிவிட்டு கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது கீழே குனிந்து கொண்டிருந்த போது நேரான கோணத்தில் கேமரா இருந்ததால் தூங்குவது போல் தெரிந்ததாக தெளிவுபடுத்தியுள்ள அவர் உண்மை தெரியாமல் கிண்டலடிக்க வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement