IND vs WI : இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு கெத்தாக பேசிய வெ.இ கேப்டன் – என்ன சொன்னாரு தெரியுமா?

Shai-Hope-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியிருந்தது.

IND-vs-WI

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதன்படி நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற அந்த அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்து பிச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்திய அணி சார்பாக இஷான் கிஷன் 55 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டை இழந்து 182 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி மகிழ்ச்சி அடைந்துள்ள வேளையில் அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் போட்டி முடிந்து தங்களது பெற்ற வெற்றி குறித்து பேசுகையில் கூறியதாவது :

Shai-Hope

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த போட்டியில் அரைசதம் கடந்து எங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த மைதானத்தில் விரைவாக ரன்களை குவிக்கும் வழிகளை தேர்ந்தெடுத்து பேட்டிங் செய்தேன். இந்தியா போன்ற வலுவான, தரமான அணிக்கு எதிராக நான் இப்படி வெற்றிக்கு அழைத்து சென்றதில் மிகவும் திருப்தியாக உள்ளது.

- Advertisement -

இந்த ஒரு வெற்றியை நாங்கள் பெற்றுவிட்டோம். நிச்சயம் அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற விரும்புகிறோம். எங்களது அணியின் வீரர்கள் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது சரியான முறையில் மீண்டு வந்திருக்கின்றனர். இதுபோன்ற ஒரு ஆட்டிடியுடன் தான் விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

இதையும் படிங்க : ஆஷஸ் தொடருடன் திடீரென ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து நட்சத்திர பவுலர் – சொதப்பல் வீரராக துவங்கி லெஜெண்ட்டாக பிரியாவிடை

இன்றைய போட்டியில் நடந்தது போலவே நிச்சயம் இறுதிப்போட்டியிலும் எங்களால் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். அதேபோன்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்று சாதிப்போம் என சாய் ஹோப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement