IND vs WI : சாக்கு போக்குலாம் சொல்ல விரும்பல. இந்திய அணி கிட்ட நாங்க தோக்க இதுவே காரணம் – வெ.இ கேப்டன் வருத்தம்

Shai-Hope
- Advertisement -

வெஸ்ட் இண்டிஸ் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

Shai-Hope-1

- Advertisement -

அதன்படி நேற்று ஜூலை 27-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 23 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் எழுந்து 114 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் ஒருமுறை இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

WI

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கூறுகையில் : இந்த தோல்வி குறித்து பேசுவதற்காக எனக்கு எந்த ஒரு வார்த்தையும் மனதிற்கு வரவில்லை. நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை அது மட்டுமே எனக்கு தோன்றுகிறது. இது போன்ற கடினமான மைதானங்களில் ரன்களை குவிக்கும் வழியை நாங்கள் கண்டறிந்தாக வேண்டும்.

- Advertisement -

இந்த தோல்விக்காக நான் எந்தவித சாக்கு போக்கையும் சொல்ல விரும்பவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்று நிகழ்வது இயல்புதான். ஆனாலும் அதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து இது போன்ற தவறுகளில் இருந்து திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம். ஜேடன் சீல்ஸ் ஒரு குவாலிட்டியான பிளேயர். அவரைப் போன்ற ஒரு வீரரை அணியில் வைத்திருப்பது பலம் தருகிறது.

இதையும் படிங்க : வீடியோ : விராட் கோலியின் ஒற்றைக்கை மேஜிக் கேட்ச் – 2 வருடங்கள் கழித்து வந்த ஹெட்மயரை போல்ட்டாக்கிய ஜடேஜா

இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக மைதானத்தின் தன்மையை பயன்படுத்தி எங்களை மடக்கிவிட்டனர். நாங்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் சரியாக பேட்டிங் செய்யாதது தான் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement