AFG vs BAN : நல்லா ஸ்டார்ட் பண்ணியும் நாங்க தோக்க இதுவே காரணம். தோல்விக்கு பிறகு – ஆப்கான் கேப்டன் வருத்தம்

Shahidi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பங்களாதேஷ் அணி தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 156 ரரன்களில் சுருட்டியது. பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அவர்கள் 34.4 ஓவர்களிலேயே 158 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி வெற்றியுடன் தங்களது உலகக்கோப்பை பயணத்தை தொடங்கியுள்ளது. அதே வேளையில் இம்முறை கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹிதி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் நன்றாகவே துவங்கினோம். ஆனாலும் எங்களது மோசமான ஷாட் செலக்சன் காரணமாகவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். இருந்தாலும் நாங்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன்.

- Advertisement -

ஆனாலும் போதுமான அளவு ரன்கள் குவிக்கவில்லை என்பதனால் இந்த தோல்வியை நாங்கள் சந்தித்துள்ளோம். இதிலிருந்து முன்னேறி அடுத்த போட்டிக்கு சிறப்பாக திரும்புவோம். இதுபோன்ற போட்டிகளில் நாங்கள் செய்யும் தவறுகளை வைத்து அடுத்த முறை இதே போன்ற தவறுகளில் செய்யாமல் இருக்கவும் பாடத்தினை கற்றுள்ளோம். எனவே நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பவும் என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs AUS : பிரெஷ்ஷா இருக்கோம்.. அந்த 3 பேர நொறுக்க பிளான் வெச்சிருக்கோம்.. இந்தியாவை எச்சரித்த கமின்ஸ்

ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற சிறப்பான சூழற்பந்து வீச்சாளர்கள் இருந்தும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவர்களது பந்துவீச்சு எடுபடாமல் போனதும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் பங்களாதேஷ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அனைத்து அணிகளுக்குமே எச்சரிக்கையை அளிக்கும் விதமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement