IND vs AUS : பிரெஷ்ஷா இருக்கோம்.. அந்த 3 பேர நொறுக்க பிளான் வெச்சிருக்கோம்.. இந்தியாவை எச்சரித்த கமின்ஸ்

Pat Cummins 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சேப்பாக்கத்தில் தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்க காத்திருக்கும் இந்தியா இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே வெற்றியை பதிவு செய்து உலக கோப்பையை வெற்றியுடன் துவக்குவதற்கு தயாராகியுள்ளது.

குறிப்பாக ஆசிய கோப்பையை வென்று தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் சமீபத்திய ஒருநாள் தொடரை போலவே ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தமிழக மண்ணில் உலகக்கோப்பை வெற்றி பயணத்தை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஏற்கனவே 5 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா நிச்சயமாக இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

கமின்ஸ் எச்சரிக்கை:
இந்நிலையில் ஐபிஎல் தொடர் காலங்களாகவே இந்தியர்களுடன் ஆஸ்திரேலியர்கள் ஆக்ரோஷமாக மோதாமல் நட்பாக பழகுவதாக சில விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போட்டியில் அதற்கெல்லாம் இடமளிக்காமல் இந்தியாவுக்கு எதிராக கருணையின்றி விளையாடுவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கூறியுள்ளார்.

மேலும் ஜடேஜா, குல்தீப், அஸ்வின் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் இந்தியா வந்தாலும் புத்துணர்ச்சியுடன் அதை நொறுக்குவதற்கு திட்டங்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “வீரர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றனர். எனவே களத்திற்கு வெளியே இருப்பதைப் போலவே அவர்கள் களத்திலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள் என்று பெருமையாக சொல்வேன்”

- Advertisement -

“மேலும் எவ்வளவு காலங்கள் மாறினாலும் இயற்கையாக எங்களுடைய வீரர்களுக்குள் இருக்கும் பண்புகள் மாறாது. அதனால் இப்போதும் பல்வேறு தருணங்களில் எங்களுடைய வீரர்கள் கோபப்படுவதை நீங்கள் பார்க்க முடியும். நாங்கள் எதிரணிக்கு எப்போதும் கருணை காட்டாமல் போட்டி போட்டு தான் விளையாடுகிறோம். அதனால் எதிரணியுடன் எங்கள் வீரர்களின் சிலர் மார்போடு மோதினாலும் அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. அத்துடன் ஐபிஎல் தொடரால் மட்டுமல்ல கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்காக நிறைய விளையாடியுள்ளோம்”

இதையும் படிங்க: CWC 2023 : 14 ஃபோர்ஸ் 3 சிக்ஸ்.. 196 ஸ்ட்ரைக் ரேட்டில் இலங்கையை நொறுக்கிய மார்க்ரம்.. உ.கோ வரலாற்றில் புதிய உலக சாதனை

“எனவே இங்குள்ள கால சூழ்நிலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த சில வருடங்களாக இந்தியாவுக்கு எதிராக இங்கே ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளதால் எங்களால் வெல்ல முடியும். அத்துடன் இந்தியாவிடம் சொந்த மண்ணில் நல்ல பவுலிங் அட்டாக் இருப்பதால் பெரிய சவாலை கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் ஏற்கனவே அவர்களை நிறைய எதிர்கொண்டுள்ளோம். எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்களிடம் அவர்களை எதிர்கொள்ள தேவையான திட்டங்கள் இருக்கிறது. சமீப காலங்களில் நாங்கள் அவர்களுக்கு எதிராக சில வெற்றிகளையும் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.

Advertisement