CWC 2023 : 14 ஃபோர்ஸ் 3 சிக்ஸ்.. 196 ஸ்ட்ரைக் ரேட்டில் இலங்கையை நொறுக்கிய மார்க்ரம்.. உ.கோ வரலாற்றில் புதிய உலக சாதனை

aiden markram
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடரில் அக்டோபர் 7ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 4வது லீப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா சரமாரியாக அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 428/5 ரன்கள் சேர்த்தது.

அதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்தது. இதற்கு முன் கடந்த 2015 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய 417/6 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு அசத்திய அந்த அணிக்கு பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே கேப்டன் பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சரவெடி மார்க்ரம்:
ஆனால் அவருக்கும் சேர்த்து அடுத்ததாக வந்த வேன் டெர் டுஷன் மற்றும் மற்றொரு துவக்க வீரர் குவிண்டன் டீ காக் ஆகியோர் ஜோடி சேர்ந்து இலங்கை பவுலர்களை பந்தாடி ஒவ்வொருவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்தனர். அந்த வகையில் 2வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 31வது ஓவர் வரை அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது டீ காக் சதமடித்து 100 (84) ரன்களில் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஐடன் மார்க்ரம் அதிரடியை துவங்கிய நிலையில் எதிர்புறம் அசத்திய டுஷன் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 108 (110) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்து அதிரடி காட்ட முயற்சித்த ஹென்றிச் கிளாசின் 32 (20) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் இலங்கை பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்த மார்க்ரம் 50 ரன்கள் கடந்து வேகமாக சதத்தை நெருங்கினார்.

- Advertisement -

குறிப்பாக குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா வீசிய 43வது ஓவரில் 4, 4, 4, 4, 2, 6 என மொத்தம் 24 ரன்களை தெறிக்க விட்ட அவர் வெறும் 49 பந்துகளிலேயே 100 ரன்களை தொட்டார். இதன் வாயிலாக 1975 முதல் நடைபெற்று வரும் 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் கடந்த 2011 உலக கோப்பையில் பெங்களூருவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் கேவின் ஓப்’ராயன் 50 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: SA vs SL : 3 வீரர்கள் சதம்.. இலங்கையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த தெ.ஆ.. ஆஸியை மிஞ்சி புதிய உலக சாதனை

அந்த வகையில் மொத்தம் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 106 (54) ரன்களை 196.3 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவருக்கு பின் டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு 39* (21) ரன்களும் மார்க்கோ யான்சென் 12* (7) ரன்களும் எடுத்து தென்னாபிரிக்கா உலக சாதனை ஸ்கோர் குவிக்க உதவினார்கள். அந்தளவுக்கு அடி வாங்கிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement