- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்திய இராணுவத்தை துச்சமாக பேசிய ஷாஹித் அப்ரிடிக்கு ஆப்பு.. பாபர், ஷாஹீன் அப்ரிடிக்கும் பதிலடி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக பாவிக்கப்படுகின்றன. இருப்பினும் இந்தியா மீது அவ்வப்போது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதனால் 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட்டில் விளையாடுவதை நிறுத்தியுள்ள இந்தியா 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது.

அந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் இந்தியாவைச் சேர்ந்த 26 அப்பாவி உயிர்கள் இயற்கையை எய்தியது மொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதனால் கோபமடைந்த இந்திய அரசாங்கம் சிந்து நதியில் தண்ணீர் வழங்கியதை நிறுத்தியது உட்பட பாகிஸ்தான் மீது பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

- Advertisement -

துச்சமாக பேசிய அப்ரிடி:

அதே போல இந்தியாவுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பும் பாகிஸ்தானை சேர்ந்த நபர்கள், ஊடகங்களுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்து வருகிறது. அந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக சோயப் அக்தர், பசித் அலி ஆகிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பாகிஸ்தானை சேர்ந்த 18 நட்சத்திர யூடியூப் சேனல்களை இந்திய அரசாங்கம் இந்தியாவில் முடக்கியது. அதற்கிடையே முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இந்தியா ராணுவத்தை துச்சமாக பேசியிருந்தார்.

அதாவது இந்தியாவில் பட்டாசு வெடித்தால் கூட அதற்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று இந்தியர்கள் குறை சொல்வதாக அப்ரிடி தெரிவித்தார். மேலும் 8 லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்ரிடி கூறினார். அப்படியானால் இந்திய ராணுவம் பயனற்றதாக இருப்பதாகவும் அவர் கொச்சைப்படுத்தினார்.

- Advertisement -

இந்தியாவின் ஆப்பு:

அது போக இந்தியாவில் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று சொல்லி இந்தியர்கள் பாலிவுட் நாடகத்தை அரங்கேற்றுவதாகவும் அப்ரிடி பேசினார். இறுதியாக பாகிஸ்தானை விமர்சிப்பவர்கள் ஆதாரத்தைக் காட்டுமாறு அப்ரிடி கூறியிருந்தார். இந்நிலையில் ஷாஹித் அப்ரிடியின் யூடியூப் சேனலையும் முடக்கி இந்திய அரசாங்கம் ஆப்பு அடித்துள்ளது.

இதையும் படிங்க: கண்ணுக்கு மேலே 7 தையல்.. கண்ணாடியுடன் அர்ப்பணிப்புடன் விளையாடிய பாண்டியா.. காயம் ஏற்பட்டது எப்படி?

ஏனெனில் ஏராளமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து தான் ஷாஹித் அப்ரிடி, சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் வீரர்களின் ஹிந்தி யூடியூப் சேனல்களுக்கு ஏராளமான பார்வைகள் (வியூவ்ஸ்) கிடைக்கின்றன. தற்போது அதை முடக்கியுள்ளதால் அவர்களுக்கு கிடைக்கும் பெருமளவு வருமானம் பறிபோக உள்ளது. இது போக பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்சத் நதீம் போன்ற பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர விளையாட்டு வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் இந்திய அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -