பாபர் அசாம் இந்த விஷயத்துல தோத்துட்டாரு.. அதான் உண்மை – வெளிப்படையாக பேசிய ஷாஹித் அப்ரிடி

Afridi-and-Babar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவரது மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி எதிரிபார்த்த அளவிற்கு செயல்படாமல் ஓரளவுக்கு சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி ஏமாற்றத்தை தந்தது.

குறிப்பாக பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் பேசப்பட்ட பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் அவர்களது பலத்திற்கு ஏற்ப பந்து வீசவில்லை என்ற குறை தெரிந்தது.

- Advertisement -

அதோடு பாபர் அசாமின் தலைமையில் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. தனிப்பட்ட முறையிலும் சரி, கேப்டனாகவும் சரி பாபர் அசாம் இந்த உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய சறுக்களை சந்தித்துள்ளார். இதற்கு முன்னர் மிகப் பிரமாதமான பார்மில் இருந்த பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இப்படி ஒரு சரிவை சந்தித்தது அந்த அணியின் சில பலவீனங்களை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு லீடராக பாபர் அசாம் தோல்வியை சந்தித்துள்ளார் என்றும் அவரது கேப்டன்சி இன்னும் முழுமையாக பூர்த்தியடைய வில்லை என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

மக்கள் அனைவருமே நான் பாபர் அசாமை குறை கூறுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது இந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அவர் கேப்டனாக இருந்தும் ஒரு லீடராக அவர் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லை இருந்தாலும் நாம் அவருக்கு ஆதரவு அளித்து அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : மேக்ஸ்வெலை கூட அவுட்டாக்கிரலாம்.. ஆனா தரமான அவரை அவுட்டாக்குறது கஷ்டம்.. வாசிம் அக்ரம் பாராட்டு

தற்போது அவர் ஒரு லீடராக சறுக்களை சந்தித்து இருந்தாலும் அவர் இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன். யூனிஸ்கான் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் எந்த ஒரு கலந்துரையாடலும் இல்லாமல் எந்த ஒரு முடிவுமே எடுக்க மாட்டார். அதேபோன்று சில முக்கிய முடிவுகள் அவர் சரியாக இருப்பார். அந்த அந்த வகையில் பாபர் அசாமும் இனிவரும் காலங்களில் அனைத்தையும் கற்றுக் கொள்வார் என ஷாஹித் அப்ரிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement