ரொம்ப ஆடுனா இதான் நடக்கும்.. இந்தியாவின் தோல்வி பற்றி ஷாஹித் அப்ரிடி அதிரடி கருத்து

Shahid Afridi
- Advertisement -

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக சொந்த மண்ணில் மட்டுமே நடைபெற்ற இந்த தொடரில் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உச்சக்கட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து மிரட்டி வந்தது.

அத்துடன் ரோகித் சர்மா முதல் திடீரென்று வாய்ப்பு பெற்ற மிரட்டலாக பந்து வீசிய ஷமி வரை அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் எதிரணிகளை தெறிக்க விடும் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக 2019 உட்பட ஐசிசி பெரும்பாலும் தோல்வியை பரிசளித்து வந்த நியூசிலாந்தை செமி ஃபைனலில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அட்டகாசம் செய்தது.

- Advertisement -

தொடர் வெற்றிகளின் முடிவு:
அதனால் 2011 போல நிச்சயம் இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாதனை படைப்போம் என்று இந்திய ரசிகர்களும் உச்சகட்ட நம்பிக்கையை பெற்றனர். ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சுமாராக விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை கோட்டை விட்டது.

அதனால் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த முடியாமல் பரிதாபமாக சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் வீழ்ந்தது. இந்நிலையில் தொடர் வெற்றிகளால் வரும் அதிகப்படியான தன்னம்பிக்கை உங்களுக்கு இப்படி தோல்வியை கொடுக்கும் என்று இந்தியா பற்றி முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சாமா தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தொடர்ச்சியாக வெற்றி மேல் வெற்றிகளை பெற்று வந்தால் நீங்கள் அதிக தன்னம்பிக்கையை பெற்று விடுவீர்கள் (ஓவர் கான்ஃபிடன்ஸ்). அது தான் உங்களுக்கான வீழ்ச்சியை கொண்டு வரும்” என்று கூறினார். முன்னதாக நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக ஒரு தோல்வியை சந்திப்பது அணியின் பலவீனத்தை சரி செய்வதற்கு உதவும் என்று தோனி 2011இல் சொன்னதாக ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியாவின் பயிற்சியாளரா இருப்பீங்களா? ராகுல் டிராவிட் பதில்

அந்த வகையில் தொடர்ச்சியாக வென்றதால் பலவீனம் தெரியாமல் கடைசியில் ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்ததாக சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்த நிலைமையில் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையின் சோக்கர் என்றால் இந்தியா உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அவர்களுக்கு செமி ஃபைனலுக்கு வராது நீங்கள் பேச தகுதியற்றவர்கள் என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement