அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியாவின் பயிற்சியாளரா இருப்பீங்களா? ராகுல் டிராவிட் பதில்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் ஃபைனலில் சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

மேலும் இத்தொடரில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வந்த ரோகித் சர்மா கடைசி வரை தம்முடைய கேரியரில் உலகக் கோப்பையை வெல்ல முடியாமலேயே விடை பெற உள்ளார். ஏனெனில் தற்போது 36 வயதாகும் அவர் 2027 உலகக் கோப்பையில் 40 வயதை தொட்டு விடுவார் என்பதால் விளையாடுவது மீண்டும் அசாத்தியமானதாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விடை பெறும் டிராவிட்:
அவரை விட சச்சினுக்கு பின் அடுத்தபடியாக சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ராகுல் டிராவிட் 2003 உலக கோப்பையில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரராக தோல்வியை சந்தித்தார். அதை விட 2007 உலக கோப்பையில் ஒரு கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் படுதோல்வியை சந்தித்த அவர் தற்போது ஒரு பயிற்சியாளராக கூட கடைசி வரை கோப்பையை முத்தமிடாமல் விடை பெற உள்ளார்.

ஏனெனில் இந்த உலகக் கோப்பையுடன் அவருடைய தலைமை பயிற்சியாளர் பதவி காலம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 2017இல் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி 2019இல் மீண்டும் 2 வருடங்கள் பதவி நீட்டிக்கப்பட்டு 2021 டி20 உலகக்கோப்பை வரை இந்தியாவின் பயிற்சியாளராக செயல்பட்டார். அதே போல தற்போது ராகுல் டிராவிட் அடுத்த 2 வருடங்கள் பயிற்சளராக நீட்டிக்கப்படுவாரா அல்லது நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

சொல்லப்போனால் இதைப்பற்றி ஃபைனல் தோல்விக்கு பின் நேரடியாக செய்தியாளர்கள் கேட்ட போது அவர் பதிலளித்தது பின்வருமாறு. “அதை பற்றி நான் இன்னும் நினைக்கவில்லை. தற்போது அதைப் பற்றி நான் சிந்திப்பதற்கான நேரமும் இல்லை. ஏனெனில் தற்போது நான் முழுவதுமாக இந்த உலகக் கோப்பையில் மட்டுமே கவனம் செலுத்தினேன். வருங்காலத்தை பற்றி நான் எதையும் சிந்திக்கவில்லை”

இதையும் படிங்க: அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியாவின் பயிற்சியாளரா இருப்பீங்களா? ராகுல் டிராவிட் பதில்

“மேலும் என்னை பற்றி நான் அலசி மதிப்பிடுபவன் கிடையாது. இதுவரை இந்திய அணியுடன் இணைந்து வேலை செய்ததில் பெருமையடைகிறேன். 2024 டி20 உலக கோப்பை வரை செயல்படுவேனா என்பது பற்றி தற்போது எந்த சிந்தனையையும் முடிவையும் எடுக்கவில்லை. அதே போலவே 2027 உலகக்கோப்பை வரை பயிற்சியாளராக செயல்படுவது உட்பட வருங்கால திட்டத்தையும் நான் வைத்திருக்கவில்லை. இதற்கெல்லாம் நிறைய காலங்கள் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement