- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முடியலன்னா முன்னாடியே சொல்லிடுங்க.. அதை விட்டுட்டு இந்தியாவின் பெயரை சங்கடப்படுத்தாதீங்க.. அப்ரிடி சாடல்

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டது. எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது.

2012க்குப்பின் இருதரப்பு தொடரில் பாகிஸ்தானுடன் மோதுவதை நிறுத்தியுள்ள இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி கோப்பைகளில் மட்டுமே மோதி வருகிறது. அந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் 26 அப்பாவி மக்கள் இயற்கை எய்தியதால் கோபமடைந்த இந்திய அரசு பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்து தக்க பதிலடி கொடுத்தது.

- Advertisement -

முடியலன்னா சொல்லிடுங்க:

அதனால் தற்சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள நட்பில் உச்சகட்ட விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக முன்னாள் இந்திய வீரர்கள் விளையாடலாமா? என்று சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர். அதனால் பதான் சகோதரர்கள், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று அறிவித்தனர்.

அதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று இந்திய சாம்பியன்ஸ் அணி நிர்வாகமும் அறிவித்தது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக போரில் தோற்காத இந்தியா தோற்றதாக சொல்லி போலியான பிரச்சாரம் செய்த பாகிஸ்தான் ரசிகர்கள் தற்போது முன்னாள் இந்திய வீரர்கள் தங்களுடன் விளையாடப் பயந்து விட்டதாக சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -

அப்ரிடி சாடல்:

இந்நிலையில் முடியாவிட்டால் முன்னதாகவே சொல்ல வேண்டிய இந்திய வீரர்கள் திடீரென விலகி இந்திய நாட்டின் பெயருக்கு சங்கடத்தை உண்டாக்கியுள்ளதாக பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாம் இங்கே கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வந்திருக்கிறோம். கிரிக்கெட்டை அரசியலுடன் தொடர்பு படுத்தக்கூடாது என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்”

இதையும் படிங்க: வெறும் 27 வயதிலேயே ஜாம்பவான்களின் சாதனையை உடைத்து வரலாறு படைக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

“அது முன்னோக்கி நகர வேண்டும். ஒரு வீரர் நல்ல தூதராக இருக்க வேண்டுமே தவிர அவர்களுடைய நாட்டுக்கு சங்கடமாக இருக்கக் கூடாது. ஒருவேளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட விரும்பாவிட்டால் இத்தொடருக்கு வரமுடியாது என்று ஆரம்பத்திலேயே மறுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கே வந்து பயிற்சிகளை எடுத்து திடீரென ஒரே நாளில் அனைத்தையும் மாற்றியுள்ளார்கள்” என்று கூறினார்.

- Advertisement -