நீங்களும் செமி ஃபைனலுடன் வீட்டுக்கு போறீங்க, கம்பீர் – அப்ரிடி இடையே மீண்டும் வெடித்த மோதல், நடந்தது என்ன

Afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்ற வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பரம எதிரிகளாக இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியில் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் அசாத்தியமான வெற்றியை பதிவு செய்த இந்திய அணி கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தது. அதே புத்துணர்ச்சியுடன் நெதர்லாந்தை சாய்த்த இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதால் அரையிறுதிக்குச் செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியில் தலை குனிந்த பாகிஸ்தான் கத்துக்குட்டி ஜிம்பாப்பேவுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் தோற்று மேலும் அவமானத்தை சந்தித்தது.

Babar-Azam

- Advertisement -

அதனால் நெதர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வென்றும் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போயுள்ளது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. இத்தனைக்கும் வேகப்பந்து வீச்சுக்கு கை கொடுக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டும் நிலையில் பேட்ஸ்மேன்கள் தான் சுமாராக செயல்பட்டு இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணமாக அமைந்தனர். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பது தெரிந்தும் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

மீண்டும் மோதல்:
மேலும் மிடில் ஆர்டர் பிரச்சனையை சரி செய்ய ஒரு கேப்டனாக அணியின் நலனை கருதி தன்னுடைய ஓப்பனிங் இடத்தை மற்ற வீரர்களுக்கு கொடுத்து விட்டு 3 அல்லது அதற்கு கீழ் வரிசையில் பாபர் அசாம் விளையாட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதை கண்டுகொள்ளாத அவர் தொடர்ந்து ஓப்பனிங்கில் தான் களமிறங்குவேன் என்று அடம் பிடிப்பது வருவது நிறைய அந்நாட்டவர்களிடம் அதிருப்தியை யை உள்ளது. அந்த நிலையில் பக்கார் ஜமான் போன்ற வீரர்களுக்கு ஓப்பனிங் இடத்தை கொடுக்காமல் கேப்டன் பாபர் அசாம் சுயநலத்துடன் செயல்படுவதாக முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிப்படையாகவே கடுமையாக விமர்சித்தார்.

Babar Azam Gautam Gambhir

இந்நிலையில் அதற்கு பதிலடியாக இந்திய கிரிக்கெட் அணியும் அரையிறுதியை தாண்டாது என்பதால் கெளதம் கம்பீரும் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நேரம் வருமென்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி விமர்சித்துள்ளார். களத்தில் விளையாடிய போதும் ஓய்வுக்கு பின்பும் எலியும் பூனையுமாக பேசுவதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ள நிலையில் இது பற்றி ஷாகித் அப்ரிடி பேசியது பின்வருமாறு. “தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாபரை பற்றி ஏதாவது சொல்ல அவர் முயற்சிக்கிறார். ஆனால் அவரும் விரைவில் நேராக இந்தியாவுக்கு தான் திரும்பப் போகிறார்”

- Advertisement -

“நீங்கள் இவ்வாறு விமர்சிப்பதில் தவறில்லை ஆனால் உங்களது வார்த்தைகளில் கவனம் தேவை. குறிப்பாக தடுமாறும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலும் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் உங்களுடைய வார்த்தைகள் இருக்க வேண்டும். ஏனெனில் பாபர் அசாம் ஏற்கனவே நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் அவரை போல் பாகிஸ்தானிடம் ஒரு சில வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்த தொடரில் வேண்டுமானால் நாம் எதிர்பார்த்தது போல் அவர் செயல்படாமல் இருக்கலாம்” என்று கூறினார்.

Afridi

அத்துடன் ஜிம்பாப்வேவிடம் பாகிஸ்தான் தோற்றது போல் நவம்பர் 2ஆம் தேதியன்று வங்கதேசத்திடம் இந்தியா தோற்றால் இந்த பேச்சுக்கள் வராது என்ற வகையில் மறைமுகமாக சாடிய அவர் அந்த போட்டியை பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் மட்டுமே எந்த ஒரு சிறிய அணியும் பெரிய அணியை தோற்கடிக்கும் நிலைமை ஏற்படும். பேப்பரில் இந்தியா வலுவான அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது.

இதையும் படிங்க : IND vs BAN : கலங்கடித்த மழை, அப்செட் பண்ண நினைத்த வங்கப்புலிகளை ஓடவிட்ட இந்தியா – த்ரிலாக வென்றது எப்படி

அவர்களிடம் தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுக்கும் ஸ்டார் வீரர்கள் வங்கதேசத்திடமும் ஒரு காலத்தில் இருந்தனர். ஆனால் தற்போது சாகிப் தலைமையில் அந்த அணி நல்ல முடிவுகளை கொடுக்கவில்லை. எனவே தற்போதைய நிலைமை பொறுத்த வரை இப்போட்டியில் இந்தியா வெல்லும் அணியாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement