எதிர்கால வீராங்கனைகளுக்கு முன்மாதிரியா இருக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணலாமா? – ஹர்மன் ப்ரீத் கவுரை விமர்சித்த அப்ரிடி

Afridi-and-Harman
- Advertisement -

வங்கதேச நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி பங்கேற்று விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தான் ஆட்டமிழந்த விதம் அம்பயரின் தவறான முடிவால் கொடுக்கப்பட்டது என்பதை தாங்க முடியாமல் அம்பயர் விட்டு கொடுத்தவுடன் ஸ்டம்பை தனது பேட்டால் தாக்கினார்.

Harmanpreet-Kaur-1

- Advertisement -

அதோடு மட்டுமின்றி மைதானத்தில் இருந்து வெளியேறும் போது அம்பயரை நோக்கி சில வார்த்தைகளை உதித்த அவர் போட்டியின் பரிசளிப்பு விழாவின் போது கூட வங்கதேச கேப்டனை கடுமையாக விமர்சித்தார். அதோடு போட்டி முடிந்தும் கோபம் தணியாமல் அவர் தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தியிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் களத்தில் இதுபோன்ற அவரது இந்த கடுமையான செயலுக்காக போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீத ஊதியத்தை அபராதமாக ஐசிசி ஏற்கனவே உடனடியாக தண்டனையையும் வழங்கி இருந்தது. அதுமட்டும் இன்றி அவரால் சில போட்டிகள் விளையாட முடியாமல் கூட போகலாம்.

Harmanpreet-Kaur

இந்நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் சர்வதேச அளவில் நடைபெறும் இது போன்ற ஒரு போட்டியில் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று கண்டித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்தியாவுக்கு மட்டுமல்ல கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வு பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும் பெண்கள் கிரிக்கெட்டில் நாம் இதுபோன்ற செயல்களை அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. அம்பயரின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஐ.சி.சி-யின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு.

இதையும் படிங்க : கேரியரின் ஆரம்பமே அமர்க்களம், 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவமான புதிய உலக சாதனை – படைத்த பாக் வீரர்

ஹர்மன்பிரீத் கவர் நீங்கள் எதிர்கால தலைமுறைக்கு ஒரு பெரிய முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வது ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம் ஆனால் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement