நீங்க இப்படி ஆடுனா நம்ம டீம் எப்படி ஜெயிக்கும். பாபர் அசாம் செய்த தவற சுட்டிக்காட்டி – ஷாஹித் அப்ரிடி காட்டம்

Afridi-and-Babar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான ஐசிசி 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியையே சந்திக்காத அணியாக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதுவரை ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் 8 முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ள இந்திய அணி 8 முறையும் அவர்களை வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. கடந்த சில உலக கோப்பைகளை விட இம்முறை பலமான அணியாக வந்திருக்கும் பாகிஸ்தான் அணி நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று தங்களது தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இம்முறையையும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதோடு இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் குறித்தும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாபர் அசாமின் மோசமான பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எப்பொழுதுமே போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஆனால் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனெனில் நாம் தோற்றாலும் முடிந்தவரை போராடி இருக்க வேண்டும். ஆனால் இந்திய அணிக்கு எதிராக நாம் ஒன்றுமே செய்யாமல் தோல்வியை சந்தித்திருக்கிறோம். எப்பொழுதுமே ஒருநாள் நமக்கு மோசமாக அமைந்தால் அந்த நாளில் நம்மால் முடிந்த அனைத்தையும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்திய அணிக்கு எதிராக நாம் அப்படி செய்ததாக எனக்கு தோன்றவில்லை.

- Advertisement -

உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும். இந்த போட்டிகளுக்காக நாம் சரியான வகையில் தயாராகி முழு உழைப்பையும் அந்த போட்டியில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இம்முறை பாகிஸ்தான் வீரர்கள் அவ்வாறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எப்பொழுதுமே தோல்வியை சந்தித்து விட்டு மன்னிப்பு கூறுவதை விட அதிலிருந்து நாம் எவ்வாறு வெளிவந்து சிறப்பான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தமான வேளையில் எவ்வாறு நாம் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோமோ அந்த சமயத்தில் தான் நம்முடைய அணி பலமான அணி என்று பலராலும் பேசப்படும். இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் அழுத்தமான வேளையில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்தால் நமக்கு இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. தனிப்பட்ட வகையில் அவர் (பாபர் அசாம்) 40 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பொறுமையாக விளையாடினால் அவரால் எப்படி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இதையும் படிங்க : ஃபிட்னெஸ் காணாம போய்டுச்சு.. இந்தியா மாதிரி அதை ஃபாலோ பண்ணுங்க.. பாகிஸ்தானுக்கு அக்ரம் அட்வைஸ்

அவர் தன்னுடைய சராசரிக்காக மெதுவாக விளையாடியது போல் எனக்குத் தோன்றியது. மற்ற அணிகளை பார்க்கையில் இது போன்ற அழுத்தமான வேளைகளில் அதிரடியாக விளையாடி மொமென்ட்டத்தை மாற்றுகின்றனர். எப்பொழுதுமே ஒருநாள் போட்டிகளில் டாட் பால்களை குறைத்துக் கொண்டு, கிடைக்கும் பந்துகளில் பவுண்டரிகளை அடித்தால் தான் நாம் அழுத்தத்திலிருந்து வெளிவந்து பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியும். ஆனால் பாபர் அசாம் தனிப்பட்ட முறையில் எப்படியாவது 40 ரன்களை அடித்து விட வேண்டும் என்று விளையாடியதாகவே எனக்கு தோன்றுகிறது. அவர் ஆடிய அந்த மெத்தனமான ஆட்டமே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது என ஷாஹித் அப்ரிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement